Bluepad | Bluepad
Bluepad
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கே நிவாரண உதவிகள் _ அசத்தும் ரஜினி மக்கள் மன்றம் !!
A
Arvind Kumar
20th Jun, 2020

Share

நடிகர் ரஜினிகாந்த் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய சினிமாவின் அடையாளமாக ஆகிவிட்டார் ரஜினிகாந்த்.


வெடிகுண்டு  மிரட்டல் விடுத்தவருக்கே நிவாரண உதவிகள்  _ அசத்தும் ரஜினி மக்கள் மன்றம் !!


அவர் டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவருக்கு எக்கச்சக்கமான நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது.

ஒருபக்கம் செய்தியாளர்கள் அவரை குடைந்து கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் அரசியலில் இருப்பவர்கள் அவரை விமர்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர் எது செய்தாலும் இவர்களுக்கு அதை மட்டம் தட்டுவது வேலையாகிவிட்டது.

அவர் என்ன ( எந்த ) அறிக்கை விட்டாலும் அதை விமர்சித்து ஒரு அறிக்கை விட்டு, அறிக்கையில் அவர் ஏன் இப்படி சொல்லவில்லை என்று கேள்வி கேட்டு வாய்ச் சவடால் விட்டுக் கொண்டே பலர் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. மனதில் தோன்றுவதை பேசிவிட்டு , அடுத்தடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் கொடுக்கும் ஒவ்வொரு அறிக்கையும் இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

குறிப்பாக அவர் கூறிய ஒரு மாற்று அரசியல் தத்துவம் என்பது ஒரு சிறிய அளவிலான புயலை கிளப்பி இருக்கிறது. "இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை " என்கிற பெயரை பல இளைஞர்கள் அவர்களின் சமூக வலைதளங்களின் பெயராகவே மாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர் மிகத் தாமதமாகத்தான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அவர் காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை .

அப்படி பயன்படுத்தி இருந்தால் இந்நேரத்துக்கு அவர் மிகப் பெரிய அரசியல்வாதி ஆக இருக்கலாம் என்றெல்லாம் நியாயமான விமர்சனத்தையும் கூட வைக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை எல்லாம் செய்து பார்த்துவிட்டு இது வெறும் வதந்தி என்று கூறினார்கள். ஆனால் அந்த செய்தி வெளிவந்த உடனே கூட ரஜினிகாந்த்தை பலரும் கேலி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அவரே பாம் வெய்பாராம் அப்ரம் இல்லனு சொல்வாராம்" என்பது போன்ற முதல்வன் படம் டயலாக் வைத்து அவரை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாஃபர் என்பவர்தான் என்ற விஷயம் தெரியவந்தது.

அந்த ஜாபர் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கின்ற கூடுதல் தகவலும் வெளிவந்தது. இதையடுத்து அந்த ஜாபர் என்பவரின் தந்தை மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விஷயத்தை அவரின் வீட்டிலேயே சென்று உறுதிப்படுத்திக்கொண்டு, நிவாரணத்தையும், அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த செய்தி இப்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ட்விட்டர்ரில் ஓரளவுக்கு ட்ரெண்டாகி வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலர் ஓஹோ இதுதான் ஆன்மீக அரசியல் போல என்று வியந்து பாராட்டி வருகிறார்கள்.இத்தகைய நேர்மறையான எண்ணங்கள் மட்டும் செயல்கள் தான் இன்றுவரை ரஜினிகாந்த் மற்றும் அவரை சார்ந்தவர்களை வழிநடத்துகிறது என்று பெருமிதம் கொள்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

இதுமட்டுமல்லாமல் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் கொரோனா துவங்கியதில் இருந்து நித்தமும் களப்பணி செய்து வருகிறார்கள். காய்கறி கடைகள் அமைத்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இதற்காகத்தான் சென்ற வாரம் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார் "மக்களுக்கான உதவிகள் செய்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி உங்கள் உடலையும் பார்த்துக் கொள்ளுங்கள் உடல் நலம் கெட்டுப் போனால் வாழ்க்கையில் பாதி போனதுபோல" என்று கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் .

நல்ல விஷயங்களை யார் செய்தாலும் மனம்விட்டு பாராட்ட வேண்டியது தானே இத்தகைய ஒரு விஷயங்கள் நமது நாட்டில் நடப்பது மிக அரிதான ஒன்று ...14 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad