Bluepadஉலர் திராட்சையின் பயன்கள்!
Bluepad

உலர் திராட்சையின் பயன்கள்!

G
Gayathri
20th Jun, 2020

Share

பழங்கள் என்றாலே அதில் ஒவ்வொரு விதமான நன்மைகள் இருக்கும். அதுவும் அதே பழத்தை சற்று ஊற வைத்து உலர வைத்துச் சாப்பிட்டால் இன்னும் அதிகப் பலன்கள் கிடைக்கிறது. இப்படிப்பட்ட பலன்களைத் தருவதற்கென்றே தான் நமது முன்னோர்கள் அத்திப் பழத்தையும், திராட்சையும் வைத்திருக்கிறார்கள்.




இந்த பழங்களை தேனில் அல்லது சாதாரணமாகவோ ஊற வைத்துச் சாப்பிட்டால் அத்தனை பலன்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

திராட்சை பொருத்தவரை பலரும் அதை சாப்பிட பயப்படுவார்கள். பன்னீர் திராட்சை சாப்பிட்டால் சளி பிடிக்கும், பச்சை திராட்சை சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் தேவையில்லாமல் அஞ்சுகிறார்கள். ஆனால் அதில் மிக மிக நல்ல குணங்கள் பல இருக்கிறது. பன்னீர் திராட்சையை சாப்பிட்டால் அவ்வளவு நல்லது.

அத்தகைய திராட்சைகளை சற்று ஊற வைத்து சாப்பிடும்போது மேலும் பலன்கள் இரட்டிப்பாகிறது.

முக்கியமான பலன்கள்:

இன்றைக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனையே இரத்தக் கொதிப்பு. ரத்தக் கொதிப்பு இல்லாத ஆட்களைக் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு அந்த ரத்தக் கொதிப்பு அதிகரித்து இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் டென்ஷன், வாழ்க்கை முறையில் ஸ்டிரஸ் போன்ற பல இன்னல்கள். இந்த நோய் ஏற்பட்டு விடுகிறது என்றால் இதற்கு நிரந்தரமாக மாத்திரை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ரத்தக்கொதிப்பு அதிகமாக இருந்தாலும் பிரச்சனை தேவையான அளவுக்கு இல்லாமல் கம்மியாக இருந்தாலும் பிரச்சனை. இந்த ரத்தக் கொதிப்பு பிரச்சினைக்கு காலை, மாலை இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை நாளடைவில் சீராகும் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மேனியில் சருமம் பொலிவு அதிகரிக்க இந்த திராட்சை பழங்களை சாப்பிடலாம். அதுவும் இந்த உலர் திராட்சை தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கவும் வல்லது தான். அதனால் மேனி பொலிவு இந்த திட்டத்தின் மூலம் அதிகரிக்கிறது.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள அனைவரும் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜிம்முக்கு முழு பணத்தையும் கட்டி விட்டு 20 நாள் சென்று விட்டுப் பிறகு வீட்டிலேயே அதை செய்கிறேன் பேர்வழி என்று முடிவு எடுத்து விடுகிறார்கள். இந்த உலர் திராட்சையை ரெகுலராக சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்ணா பின்னாவென்று ஆகாமல் சீராக வைத்திருக்க உதவுவதாக கூறுகிறார்கள் சித்த மருத்துவ வல்லுநர்கள்.

இப்படி எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இந்த உலர் திராட்சை விலை மொத்தமாக வாங்கும் பழங்களை விட மிக மிக குறைவு தான். இதை வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு நொறுக்குத் தீனியாக கூட கொடுக்கலாம். வாரம் ஒரு முறை இந்த உலர் திராட்சையை கொடுத்து வந்தால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

அதும் இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி எதில் இருக்கிறது என்று தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த உலர் திராட்சைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த திராட்சையில் அத்தகைய நோய் எதிர்ப்பு சக்திகள் இருக்கிறது.

சிலருக்கு வாயில் துர்நாற்றம் என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கும். வாய் துர்நாற்றம் என்பது பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும். பல் சிதைவு. பற்களில் பூச்சி, குடலில் புண் போன்றவை இருந்தால் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த உலர் திராட்சை என்பது உடலில் உள்ள புண்ணை தீர்க்கவல்லது.

குறிப்பாக குடல் புண், தொண்டைப் புண் போன்றவற்றை நாளடைவில் தீர்க்க வல்லது . எனவே இந்த உலர் திராட்சையை பயன்படுத்தி வாய் துர்நாற்றத்தை போக்க முடியும். இதுவரை உலர் திராட்சை சாப்பிடாதவர்கள் திடீரென்று அந்த திராட்சை சாப்பிடும் போது சில பல சிக்கல்கள் ஏற்படலாம். நாளடைவில் அது சரியாகிவிடும் என்றும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறுகிறார்கள் நாட்டு மருத்துவ நிபுணர்கள்.

இன்னும் ஏன் தாமதம் உலர்திராட்சையை வெளுத்துக் கட்டுவோம் வாருங்கள்.

12 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad