Bluepadதெம்பு
Bluepad

தெம்பு

Thuraivan NG
Thuraivan NG
20th Jun, 2020

Share

எப்பொழுதும் போலவே
தெம்பாகத்தான் இருந்தான்.
இப்பொழுது அந்த தெம்பு எங்கே போனது என்று புரியவில்லை. பூவாய் மலர்ந்திருக்கும் முகம்
வாடியதற்கு ஏதோவொரு காரணம் இருக்கத்தான் செய்யும். அதென்னவென்று எவருக்கும் புலப்படவில்லை.
எல்லோரும் கேட்டும் பார்த்தார்கள். அவன் எதையும் துணிந்து செல்ல மறுக்கிறான். அவனுக்கே உள்ளுக்குள் பயம் வேறு இருக்கும் போல தெரிகிறது. அப்படியென்ன தகாத செயல் செய்திருப்பானென்று பலருக்கும் சந்தேகம் கூட வந்தது. ஆனால் அவன் அப்படி சந்தேகத்திற்கு செயல்புரியும் நபரல்ல என்று அனைவரும் அறிவர்.
சில யோசனக்குப் பிறகு, அவனை ஏதும் தொந்தரவு செய்யாமல் தனிமைப்படுத்தி பிறகொரு நாள் பார்த்து விசாரிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இப்பொழுது அவன் உறக்க மாத்திரை துணையோடு ஆழ்ந்து உறங்குகிறான்.
அவனருகில் யாருமில்லை. அந்த கட்டிலின் கீழே ஒரு பூனை விழித்திருக்கிறது எதையோ எதிர்ப்பார்த்து மௌனமாய்...
அவன் கண்விழிக்க இன்னும் நேரமாகலாம்.

ந.க துறைவன்.

6 

Share


Thuraivan NG
Written by
Thuraivan NG

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad