Bluepadதொடரும் கொலை, கொள்ளைகளுக்கு சினிமா மட்டும் தான் காரணமா?
Bluepad

தொடரும் கொலை, கொள்ளைகளுக்கு சினிமா மட்டும் தான் காரணமா?

R
Reshma us
19th Jun, 2020

Share

சென்ற வாரம் இரு இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்கள். அவரிடம் விசாரணை நடத்திய போது எங்களுக்கு ஒரு சினிமா பார்த்துதான் இந்த யோசனையே வந்தது என்று கூறினார்கள்.
படித்த படிப்புக்கேற்ற வேலை தேடிக் கொண்டிருந்த நாங்கள் இந்த சினிமாவில் வரும் வித்தையைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக பணம் சேர்க்க ஆரம்பித்தோம். எங்களுக்கு இந்த பண வாசனை பிடித்து விட்டதால் இந்த தொழிலை விட முடியாமல் தொடர்ந்து இந்த மாதிரி திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்தோம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதேபோல் தான் இந்த அரிவாள் கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் வன்முறைகள் போன்ற பலவற்றுக்கும் எல்லோரும் சினிமாவை தான் காரணம் காட்டுகிறார்கள்.

இவ்வளவு ஏன் சிறுகுழந்தைகள் அதிகப் பிரசங்கித் தனமாக பேசினாலும், கெட்ட வார்த்தை பேசினாலும் அதற்கும் சினிமா தான் காரணம் என்கிறார்கள். சினிமாவில் வெறும் கெட்ட விஷயம் மட்டும் தான் இருக்கிறதா என்பது போன்ற ஒரு உணர்வை சமீபகாலமாக பலரும் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் சினிமாவின் தாக்கம் அதிகம் தான் என்றாலும் அதில் கூறுவது அனைத்தும் மக்கள் அப்படியே கேட்டு விடுகிறார்களா என்றால் சுத்தமாக இல்லை.

சினிமாவில் நாயகன் நாயகி ஜாதி விட்டு, மதம் விட்டு கல்யாணம் செய்து கொண்டால் கைதட்டி பாராட்டுவார்கள். ஆனால் அதை அவர்கள் நிஜ வாழ்க்கையில் செய்ய முயற்சி செய்தால் விடுவார்களா? கொலை செய்கிறார்கள்.திரைப்படத்தில் கதாநாயகன் நியாயமாக சத்தியம் தவறாதவனாக இருந்தால் தான் மக்களால் விரும்ப படுகிறான். ஆனால் அந்த கதாநாயகன் போல் ஒருவராவது வாழ வேண்டும் என்று நினைக்கிறார்களா என்றால் சுத்தமாக இல்லை.

இது போன்ற பல விஷயங்களை கூறலாம் நல்ல நல்ல கருத்துக்கள் கூறும் படங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த ஒரு தொழிலாக பல விஷயங்கள் இடம்பெறும். அதை அப்படியே நான் பின்பற்றுவேன் என்று கூறுவதெல்லாம் எந்த அளவு முட்டாள்தனம் என்பதை நீங்களே யோசியுங்கள் என்று கூறுகிறார்கள் திரைப்படத் துறை சார்ந்தவர்கள்.

தமிழ் சினிமாவிலும் எக்கச்சக்க உண்மையான கதைகள், நாவல்கள் சிறந்த நூல்களைத் தழுவி படமாக வந்திருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே பெரிய அளவு வெற்றி பெற்றதே இல்லை. ஏனென்றால் நாம் விரும்பும் விஷயங்கள் அக்மார்க் சினிமாத்தனமான விஷயமாகத்தான் இருக்கிறது.

சினிமாவில் கதாநாயகன் அரசியல் புரட்சியில் ஈடுபடுவான், ஓட்டுக்கு காசு வாங்க மாட்டான்!! ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்..சுத்தமாக கிடையாது! நடக்கும் நல்ல விஷயங்கள் எதற்குமே நாம் சினிமாவை பயன்படுத்துவதே இல்லை. ஆனால் கெட்ட விஷயம் நடந்து விட்டால் உடனே சினிமாவை காரணம் காட்டி, இந்த சினிமாவால் தான் நாடு சீரழிந்து விடுகிறது என்பது போன்று பலர் பேசுகிறார்கள்.

சினிமாவினால் தாக்கங்கள் அதிகம் இருக்கத்தான் செய்கிறது. இது மறுப்பதற்கில்லை. ஆனால் அதை கிரகித்துக்கொள்ளும் ஒவ்வொருடைய மனநிலையை பொருத்தது. எல்லோரும் சினிமாவில் வருவதை அப்படியே காப்பி அடிப்பதில்லை. எத்தனை பேர் சினிமாவை பார்த்து நான் மரம் நட ஆரம்பித்தேன் என்று கூறி இருக்கிறார்கள்? எத்தனை பேர் நான் சினிமாவை பார்த்து பறவைகளுக்கு தண்ணீர் வைக்கத் துவங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்கள்? மிக மிக அரிது!!

சினிமாவும், செய்தித்தாள் போல ஒரு பொழுதுபோக்கு ஊடகம் தான். அதில் வரும் விஷயங்களை படித்தோமா அடுத்த வேலையை பார்த்தோம் என்று சொல்வதைப் போலத்தான் இதையும் நாம் செய்ய வேண்டும். இது சற்று பிரம்மாண்டமான ஊடகம் என்பதற்காக அதையும் நிஜ வாழ்க்கையும் போட்டு குழப்பிக் கொள்வது முற்றிலும் பிசகான ஒரு விஷயம் தான் .

இங்கு இருக்கும் கொலை, கொள்ளைகளுக்கு சினிமா மட்டுமே காரணம் அல்ல அதை தவிர மற்ற மற்ற காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது... சமூகம், பொருளாதாரம் போன்ற பல காரணங்கள் ... காரணிகள்.

10 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad