Bluepad | Bluepad
Bluepad
மனிதர்களால் காடுகளுக்கு ஏற்படும் பெரும் துயரம்!
V
Venkatesh Ramanan
19th Jun, 2020

Shareமனிதர்களால்  காடுகளுக்கு ஏற்படும் பெரும் துயரம்!

இந்த உலகத்தை சமநிலை தவறாமல் பார்த்துக் கொள்வதில் காடுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காடுகள் இல்லாவிட்டால் எண்ணற்ற விலங்குகள் வாழவே முடியாது. விலங்குகளும் இந்த பூமிக்கு மிக மிக முக்கியம். அது போல பறவைகளும் நிகரற்ற வேலையை செய்து வருகிறது.

இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல என்பதை பல நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் அதை பெரிது படுத்தவில்லை என்பது போல்தான் தோன்றுகிறது.

காடுகள் என்றாலே இயற்கை சூழ்ந்த இடம் ஆளரவம் இருக்காது கண்கொள்ளா காட்சியை காண முடியும், சுத்தமான காற்று, தெளிந்த நீரோடை என்று எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கும். ஆனால் வனவிலங்குகளும் அங்கு எக்கச்சக்கமாக இருக்கும் அதனால் தான் அடர்ந்த காடுகளுக்கு முன்பெல்லாம் மனிதர்கள் செல்லவே தயங்குவார்கள். ஆனால் இப்போது இருக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு மனிதர்கள் தனது சொந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு நடுக்காடு வரை சென்று விடுகிறார்கள்.

சரி அங்கு சென்றோம், இயற்கை ரசித்தோம், திரும்ப வந்தோம் என்பது கிடையாது. அங்கிருக்கும் வன அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அங்கு சென்று குடித்துவிட்டு பாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு வந்து விடுகிறார்கள். இதனால் அந்த வழியாக வந்து செல்லும் வனவிலங்குகள் எண்ணற்ற பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன.

குறிப்பாக இதேபோல் கண்ணாடி பாட்டில்கள் குத்தி கால் சீல் பிடித்து இறந்துபோவது யானைகள் தான் அதிகம் . யானையின் கால்கள் மெத்து மெத்து என்று பஞ்சு போன்று இருக்கும். அதற்குள் பாட்டில் சர்ரென்று ஏறிவிடும். அது யானைக்கு தெரியாது ஆனால் நாளடைவில் உள்ளே சென்ற கண்ணாடி துண்டுகள் யானையின் உடலை பதம் பார்க்கத் துவங்கி விடும்...


பாருங்கள் நமக்கென்ன என்று செய்யும் ஒரு அலட்சிய செயலால் அவ்வளவு பெரிய யானை சாய்ந்து விடுகிறது. அரசாங்கம் அனுமதிக்கும் வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் மக்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். அங்கு சென்று சாப்பிடுவது, சிப்ஸ் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் என்று எல்லாவற்றையும் அங்கேயே போட்டுவிட்டு வந்து விடுவது.

அது ஏதோ தின்பண்டம் என்று அந்த வழியாக வந்து செல்லும் விலங்குகளும் பறவைகளும் அதைக் எடுத்து சாப்பிட முயற்சி செய்து அதற்காக உயிரை விடுகிறது. இதுமட்டுமில்லாமல் மனிதனின் நடமாட்டம் பெருகப் பெருக விலங்குகள் தன்னுடைய இயல்பான வாழ்க்கை வாழ முடிவது இல்லை. அதனால்தான் காடுகள் போன்ற பகுதிகளுக்கு பயணம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மனிதன் இயற்கை சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அது யாரையும் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். மனிதனுக்கு அப்படி ஒரு பழக்கம் கிடையவே கிடையாது. தான் நன்றாக இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் ஆகவே பல்வேறு அரசாங்க காடுகளுக்கு கூட மனிதர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கதறுகிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

உண்மைதானே நாம் மனிதனின் கால்தடம் எங்கு படுகிறதோ அங்கெல்லாம் மாசடைகிறது. மனிதனாகிய நாம் செல்லும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இல்லை அப்படி கூறுபவர்களை மதிப்பதும் இல்லை.. பிறகு எப்படி?

இப்படி காடுகளை நாசமாக்கி விட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் வாழ்விடம் தேடி நாம் வசிக்கும் இடத்திற்கு தான் வரும். அப்படி வரும் விலங்குகளை எல்லாம் நாம் சும்மா விடுவதில்லை. அந்த விலங்கு வந்துவிட்டது, இந்த விலங்கு வந்து விட்டது என்று கூறி பிடித்து கொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

வனவிலங்குகளின் குணம் வேட்டையாடுவது மட்டுமே. ஆனால் அது அதன் இடத்தில் இருந்தால் தேவையான வரை மட்டுமே வேட்டையாடி எடுத்துக்கொள்ளும் . ஆனால் அது நம் இடத்திற்கு வந்தால் அதன் குணமும் மாற நேரிடலாம்.

எனவே காடுகளுக்கு சென்று அதை மாசு படுத்தாத வரை நம் வாழ்வு மிக நன்றாக இருக்கும் . இல்லையேல் நாளடைவில் நமக்கு தான் சிக்கல் ஏற்படும். அவரவர்கள் அவர்களிடத்தில் நிம்மதியாக வாழ்வது தான் சால சிறந்தது. நாம் விலங்குகள் இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றால் விலங்குகளும் அப்படி நினைக்க வெகு நாட்கள் ஆகாது!

12 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad