மனித வாழ்க்கையின் தத்துவத்தை தயவுசெய்து வருங்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ பெற்றோர்களை நம்புங்கள். பிரச்சனையோ ஏதாவது உருவாகும்போது, கை, கால், முறிவு விபத்து , வந்தால் எந்தப் பிரச்சனை வந்தாலும் அவர்கள் தான் வருவார்கள் அவர்கள் தான் அப்பா அம்மா. பெற்றோர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். இதுதான் இந்தியாவின் கட்டமைப்பு.
மொழி, மதம் , ஜாதி , மற்றும் பொது விஷயம் என்று சொன்ன தலைவர்களை தயவுசெய்து நம்பாதீர்கள். மொழிக்காக, மதத்துக்காக , ஜாதிக்காக மற்றும் பொது விஷயங்களுக்காக, தன் மகனை தீக்குளிக்க எந்தத் தலைவரும் சம்மதிக்க மாட்டான்.
அடுத்தவன் பெற்ற பிள்ளை எவனாவது இருந்தால் ஏமாறுபவன் 10 பேர் நமக்கு கிடைக்காதா என்று எல்லா தலைவனும் , அழைக்கிறான், அலைகிறான்.
நம்பி ஏமாறாதீர்கள் சாக்ரடீஸ் சொன்னது போல்.
எந்த ஒரு பொது விஷயத்துக்கும் நீங்கள் விரும்பும் தலைவர்கள் சொன்னார்கள் என்று தயவுசெய்து தீவிரமாக இறங்கி உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் இளைஞர்களே.
நான் சொல்வது அனைத்தும் உண்மையான கருத்து தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
குடும்ப வாழ்க்கை , தன் குடும்பம் தன் மனைவி தன் குழந்தைகள் வாழ வேண்டும் என்று எல்லா தலைவனும் நினைக்கிற உலகம் இது. பொது விஷயம் பேசும் தலைவர்களை தீவிரமாக நம்பாதீர்கள் 10% மட்டும் நம்புங்கள்
உதாரணமாக ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள்
ஒரு குழந்தை கருவறையிலிருந்து பிறக்கும் பொழுது அதற்கு எதுவும் தெரியாது,
அதற்கு நாம்தான் நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் தான் சொல்லிக் கொடுக்கிறோம்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
குடிபோதையில் வண்டி ஓட்டக் கூடாது.
ஒருவழிப் பாதையில் செல்லக் கூடாது.
அனைத்து போக்குவரத்து விதிகளையும் கடைபிடித்து வண்டி ஓட்டுங்கள். என்று ஒரு பெற்றோர் தன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள் அப்படி வண்டி ஓட்டினாலும்.
நடைமுறையில் நடப்பது என்ன.
நீங்கள் உங்களைவிட பதவியை , பணம் மிக்கவர்களை, ஏன் இந்த உலகத்தில் நாம் மதிக்கும் எந்த தலைவர்களையும் எந்த அதிகாரிகளையும் அவர்கள் மகனையே, அல்லது மகளையோ அவர்களது நெருங்கிய உறவினர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள் யாராக இருந்தாலும்
சட்டத்துக்குப் புறம்பாக குடித்துவிட்டு , ஒருவழிப் பாதையில் டிரைவிங் லைசென்ஸ் , இல்லாமல் வந்தால்,
நாம்தான் பணிந்து போக வேண்டும் இதுதான் நடைமுறை.
அதிகாரிகளுக்கும் அது தெரியும்.
நடைமுறையை புரிந்துகொள்ளுங்கள் தயவுசெய்து இளைஞர்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் பெற்றோர்களை உங்களது அப்பா அம்மா உங்களை நம்புங்கள். உயிரைக் கொடுத்து உங்களை காப்பாற்றுவார்கள்.
இது நமக்கு மட்டுமல்ல அரசு அதிகாரிகளுக்கும் அவரது உயர் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்தால் இது தான் கதி.
சட்டம் ஒன்றாகவும் நடைமுறை வேறாகவும் உள்ளது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து தயவு செய்து வாழுங்கள் இதுதான் நடைமுறை வாழ்க்கை.
சட்டத்தை நம்புவதா ? நடைமுறையை நம்புவதா?
வருங்கால இளைஞர்களை கேட்கிறேன் தீர்மானித்து வாழுங்கள். உங்களுக்குப் பிடித்த இல்லையோ பெற்றோர்களை நம்புங்கள்.