Bluepadசினிமாவில் மட்டும்தான் இருக்கிறதா இந்த நேபோடிஸம்?
Bluepad

சினிமாவில் மட்டும்தான் இருக்கிறதா இந்த நேபோடிஸம்?

R
Reshma us
18th Jun, 2020

Share



கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த செய்தித்தாளை பிரித்துப் பார்த்தாலும் நம் கண்ணில் படும் இந்த வாக்கியம்! நேபொடிசம் ( Nepotism ) என்னும் வார்த்தை கடந்த நாட்களில் மிக பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.

இந்த வார்த்தைக்கு குடும்பம் சார்ந்த சிபாரிசு அல்லது ஒரு குருட்டு நம்பிக்கை என்னும் அர்த்தம் பொருந்தும். இப்போது ஹிந்தி சினிமா அதிகமாக இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். ஹிந்தி சினிமா உலகைப் பொருத்தவரை அப்பா, பிள்ளை, பிள்ளையின் மகன் அல்லது சொந்தக்காரர் போன்றவர்கள் பலர் நடித்து வருகிறார்கள். இதை நிறுத்த வேண்டும் என்பது போன்ற குரல்களை எழுப்பி வருகிறார்கள் பலர். அதாவது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்தவித சிரமமுமின்றி அல்லது மிகக் குறைவான திறமையைக் கொண்டு சிபாரிசு மூலம் இந்தி சினிமாவை ஆக்கிரமித்து விட்டார்கள் என்கிற ஆதங்கம் இப்போதுதான் பொங்கி வருகிறது...!

இந்த குறைபாடு என்பது சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனேக விளையாட்டுகளில் மற்றும் அரசியலில் இது தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் நாம் பொருட்படுத்துவதே இல்லை.

அரசியலில் உள்ளது !
அரசியலில் இந்த விஷயம் மிக சகஜம்!
கவுன்சிலர் முதல் பெரிய கட்சி தலைவர் வரை இதே நிலைதான் அரசியலில் ...

ஒருவர் பதவியில் இருப்பார், அவருடைய மகனுக்கு ஒரு பதவி இருக்கும், அவருடைய மனைவிக்கு ஒரு பதவி இருக்கும், பிறகு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தாலும் அவருக்கும் ஒரு பதவி இருக்கும். அவர்களே நிரந்தரமாக ஆட்சி செய்வார்கள்.

தொண்டர்கள் கடைசிவரை இருந்துகொண்டே இருப்பார்கள் வாழ்க ... வாழ்க என்று சொல்லிக்கொண்டே.

இதை நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா என்றால் இல்லவே இல்லை. அல்லது நமக்கு இது நன்றாகத் தெரிந்திருந்தாலும் இதில் தலையிட முடியுமா என்ன என்று ஒதுங்கி விடுகிறோம்.

நிறுவனங்களில் நடப்பதும் இதுதான் !

பல பல நிறுவனங்களில் இதே நிலை தான் தொடர்கிறது. விஐபி படத்தில் தனுஷ் கூறுவதுபோல முதலாளியின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு பலர் இன்று நிர்வாக மேலாளராக இருக்கிறார்கள்...! அவர்கள், அவர்களுக்கு உடன் பணியாற்றும் சக ஊழியர்களை துச்சமாக மதித்து அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை கூட தட்டிக்கழித்து வருவார்கள்.

இன்னும் சில நிறுவனங்களில் உயர் பதவிகள் எல்லாம் அவர்களது சொந்த பந்தங்கள் மட்டுமே பதவியில் இருப்பார்கள். இந்த சங்கிலித் தொடர் முறை என்பது எல்லாத் துறைகளிலும் தான் இருக்கிறது. ஆனால் சினிமாவில் இதை பெரிது படுத்துவது என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

அதுவும் இப்போது ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக இதை இப்போது தூக்கிப் பிடிக்கிறார்கள்... ஒரு வாரம் கழித்து இதை மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கி விடுவார்கள்.

நமது நாட்டின் பொருட்களை நாம் வாங்குவதே இல்லை. அதற்கும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை தான் காரணம் வெளிநாட்டு தயாரிப்புக்கள் என்றால் மிக நன்றாக இருக்கும் அல்லது நமது நாட்டு தயாரிப்புகள் நன்றாக இருக்காது என்கிற ஒரு குருட்டு நம்பிக்கை நமது ஆழ் மனதில் வேரூன்றி விட்டது. நாம் பல் துலக்கும் போது முதல் எல்லாமே வெளிநாட்டு தயாரிப்புகள்தான். இதுவும் ஒருவிதமான நேபொடிசம் தான்!!

முன்பு போல் இல்லாமல் இப்போது இந்திய பொருட்களும் நிகரான தரத்தில் தான் கிடைக்கிறது ஆனால் "மேட் இன் இந்தியா" என்று பார்த்தாலே பலருக்கு பற்றி எரியும் குறிப்பாக இந்த டூவீலர்களில்.

10 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad