Bluepad | Bluepad
Bluepad
நம்மில் பலர் அறியாத ஒரு கடினமான வாழ்வு - கனரக ஓட்டுநர்களின் வாழ்வு.
A
Ananth A.
18th Jun, 2020

Share

நமக்கு பிடிக்காத ஒரு வாகனம் என்றால் அது லாரி ஆகத்தான் இருக்க முடியும் பிடிக்காது என்று கூறுவதைவிட பயம் அச்சுறுத்தும் வாகனமாக கருதலாம். குறிப்பாக சாலையில் வரும்போது அந்த லாரி எழுப்பும் ஒலியும், அதிலிருந்து வரும் புகையை என்னவோ சினிமாக்கள், நாடகங்களில் அதை அப்படியே காமித்தால் அது அளிக்கும் ஒரு தோற்றமே நம்மளை பயபடுத்திதான் வைத்திருக்கிறது.


நம்மில் பலர்  அறியாத ஒரு கடினமான வாழ்வு - கனரக ஓட்டுநர்களின்  வாழ்வு.


அதுவும் ஒரு செய்தித் தாள்களில் லாரி விபத்து என்று வராமல் இருக்கவே இருக்காது. அந்த அளவுக்கு லாரி என்றாலே எமனின் வாகனம் போல நாம் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அந்த லாரி ஓட்டுநர்களின் நிலையும் அதில் வேலை செய்பவர் நிலையும் இருக்கிறதே... நிஜமாக அது ஒரு பரிதாபமான வாழ்க்கை!!

லாரி ஓட்டுநர்களின் நம்பி தான் நாம் இருக்கிறோம். அவர்கள் இல்லாவிடில் நமது ஊருக்கு காய்கறி முதல் எந்த சரக்கும் வந்தே சேராது.

அந்த லாரி ஓட்டுனர்கள் மட்டும் இல்லை என்றால் கம்ப்யூட்டரும் கிடையாது, கால்குலேட்டர் கிடையாது, கடலை மிட்டாயும் கிடையாது. எல்லாவிதமான சரக்குகளையும் அவர்களை நம்பித்தான் நமது நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

உதாரணமாக ஒருவர் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் வரைகூட செல்லும் வேலை இருக்கிறது அதையும் தாண்டி கூட செல்கிறார்கள். அப்படி அவர்கள் செல்லும் போது வழிநெடுக அவர்கள் சந்திக்கும் நிலை இருக்கிறதே மிகவும் கடினம். ஒரு பொருளை ஏற்றி அவர்களிடத்தில் இறக்கி விட்டு பிறகு மீண்டும் இங்கு வருவது தான் வேலை.

ஆனால் அது மட்டுமா அவர்கள் செய்கிறார்கள் பாவம்...!

வழி நெடுகிலும் டிபன் கடைகள் இருந்தாலும் அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு முக்கால்வாசிப்பேர் தாமே சமைத்து விடுவார்கள். இப்படி சமைப்பதில் வட இந்திய லாரி ஓட்டுனர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். வெறும் உருளைக்கிழங்கு, வெங்காயம் சிறிது கோதுமை மாவு இருந்தால் போதும் விதவிதமான பண்டங்களை அதிலே செய்து சாப்பிடுவார்கள்.

உண்மையாகவே லாரி ஓட்டுனர்கள் படும் துயரங்கள் நம்மில் யாருக்குமே தெரிவதில்லை. ஒரு சில சினிமாக்களில் தான் லாரி ஓட்டுனர் பற்றி கூறியது அதுவும் முழு அளவில் கிடையாது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஆப்பிள் வாங்க சென்ற லாரி ஓட்டுனர்கள் 15 பேருக்கு மேற்பட்டவர்கள் மாட்டிவிட்டார்கள். அதுவும் நமது தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த செய்தி யாருக்குமே தெரியாது. சாவகாசமாக ஒரு மாதத்திற்கு பிறகு அது ஒரு நிமிட செய்தியாக போட்டுக்காட்டி கடந்து விட்டார்கள். செய்தித்தாள்களிலும் கடைசிப் பக்கத்தில் ஒரு குறுஞ்செய்தி ஆகத்தான் வந்தது.

அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் என்பது மிகவும் கம்மி. ஏனென்றால் அவர்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அவர்கள் கொண்டு செல்லும் பாதையே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் அதற்கு தகுந்தார்போல் அவர்கள் சம்பாதிக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.

லாரி ஓட்டுனர் என்றால் வெறும் லாரி ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. பாதி வழியில் டயர் பஞ்சர் ஆனாலும் அதை அவர்களே மாற்ற வேண்டும். இது ஏதோ டூவீலர் டயர் கிடையாது, லாரி டயர் என்பது மிக மிகக் கனமானது. அதை தூக்கி நிறுத்தி திருப்ப ஒரு மிகப்பெரிய பலம் தேவைப்படுகிறது. அதற்கு தகுந்தார்போல் லாரி கிளீன் செய்ய வேண்டி இருக்கிறது இல்லை லாரியின் கண்டிஷனை பார்ப்பது, ரேடியேட்டரில் நீர் ஊற்றுவது, ஆயில் மாற்றுவது, டீசல் அளவிடுவது போன்ற பல வேலைகள் இருக்கிறது அவருக்கு.

லாரி ஓட்டுநர்களுக்கு என்று சங்கங்கள் இருந்தாலும் அவர்களின் கோரிக்கையை அந்த சங்கங்கள் முழுதாக ஏற்பதில்லை. இத்தனை நாட்கள் வேலை பார்த்தால் ஒரு அளவிற்காவது சம்பள நிர்ணய கேட்கிறார்கள். ஆனால் அது அவர்களுக்கு கிடைப்பது இல்லை.

பொதுவாகவே லாரி ஓட்டுநர்களுக்கு பல பாஷைகள் தெரிந்து இருக்கும். ஏனென்றால் இந்தியா முழுவதுமே அவர்கள் வீடு போலதான். நிறுத்தி நிதானமாக வழி சொல்வார்கள். இங்கிருந்து மகாராஷ்டிரா எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டால் துரிதமான வழி சொல்லத் தெரியும். நாம் சாவகாசமாக ரசித்தபடி செல்வதற்கும் அவர்களுக்கு வழி சொல்ல தெரியும். கூகுள் மேப்பில் வருவதற்கு முன்னாடி லாரி டிரைவர்கள் தான் நடமாடும் மேப்புகளாக செயல்பட்டார்கள் தெரியுமா.

வாகனப் பழுதை தவிர அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய ஒரு இடர்பாடு வழி கொள்ளையர்கள். நெடுஞ்சாலை என்னும் படத்தில் காண்பது போல பல மடங்கு அந்த கொள்ளையர்களின் அராஜகம் அதிகரித்து இருக்கிறது. இவர்கள் லாரி ஓட்டுனர்களை பலமுறை கொலை செய்யும் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்படி நடக்கும் போது அவர்கள் இறந்து கிடப்பதையோ அல்லது அடிப்பட்டு கிடப்பதையோ அவர்கள் பயன்படுத்திக் கொண்டு லாரியில் இருக்கும் மற்ற பொருட்களையும் சூறையாடி விடுகிறார்கள். லாரி ஓட்டுனர்களுக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.

இதற்காகத்தான் சில நாட்களுக்கு முன்னாடி லாரி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று காரணம் காட்டி அதை தட்டிக் கழித்து விட்டார்கள்.

லாரி ஓட்டுநர்களை நீங்கள் மதிக்க வேண்டாம் குறைந்தபட்சம் அவரை மனிதர்களாக மதியுங்கள் என்று கூறுகிறார்கள் லாரி மேலாளர்கள்.

லாரிகளில் பல்வேறு வகைகள் இருக்கிறது. அதை எல்லாம் கையாள்வதற்கு மிக தனி திறமை தேவைப்படுகிறது. ஒரு சின்ன சாலையில் நாம் டூவீலரை வளைப்பதற்கு அந்த பாடு படுகிறோம். ஆனால் அவர்கள் பெரிய வண்டி எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று வருகிறார்கள் என்றால் அவர்களை தாராளமாக மனம்விட்டு பாராட்டலாம்.

ஏற்கனவே நாம் கூறியது போல, அவர்கள் இல்லை என்றால் நமக்கு அத்தியாவசிய பொருட்கள் என்று எதுவுமே கிடைக்காது. சிலிண்டர்கள் முதல் தீப்பெட்டி வரை எல்லாம் அவர்களை சார்ந்தே இருக்கிறது.

லாரி ஓட்டுனர்களின் ஒரே கோரிக்கை என்னவென்றால் கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் எக்கச்சக்கமாக இருப்பது போல லாரிகளுக்கு வைத்து வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பதில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இத்தனை பெரிய கனரக வாகனங்களை கொண்டு செல்லும் போது இடித்து விட்டால் கூட லாரி ஓட்டுனருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை இதுவரை... அதை அவர்கள் சற்று கன்சிடர் செய்தால் தேவலை !

9 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad