Bluepadஇந்தியா முழுவதும் பரவி வரும் தென்னாட்டு ( தென் இந்திய வகை ) ரெஸ்டாரன்ட்கள்.
Bluepad

இந்தியா முழுவதும் பரவி வரும் தென்னாட்டு ( தென் இந்திய வகை ) ரெஸ்டாரன்ட்கள்.

S
Senthil Rajan
30th Nov, 2021

Share



சாப்பாடு என்றால் அதில் ஒரு தனி பிரியம் தான். நான் வாழ்வதே நிம்மதியாக சாப்பிட தானே அதாவது வயிறார சாப்பிட தானே? இப்படி சாப்பிடுவதற்கு கூச்சப்படுவது என்பது கடந்த சில தலைமுறைகளில் இல்லவே இல்லை.

தற்போது உடல் எடையை காரணம் காட்டி கௌரவத்தை காரணம் காட்டி சாப்பிடவே பூச்சி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சாப்பிடுவதற்கு என்ன தடை இருக்க போகிறது?

அதிலும் டிஃபன் என்றால் நம்ம ஊரில் கிடைக்கும் இட்லி, தோசை ,பொங்கல் ,பூரி , பரோட்டா இதற்கு தனி மவுசு உண்டு. இப்போது இந்தியா முழுவதும் தென்னிந்திய ரெஸ்டாரன்ட்கள் மிகவும் பிரசித்தம் அடைந்து வருகின்றன. இதற்கு முன்னாள் இந்தியா முழுவதும் நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் அந்த அளவு கிடையாது. வெளிநாடுகளில் எல்லாம் அதுவும் நம் தென்னிந்தியர்கள் வசிக்கும் இடத்தில் நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும்.

ஆனால் இப்போது இந்தியா முழுவதும் நம்ம டைப் ரெஸ்டாரண்ட் அதிகரித்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள்.

வட நாட்டுக்காரர்களுக்கு நம்ம ஊர் டிபன் தான் பிடித்துவிடுகிறது:

நமது தென்னிந்தியா முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கிறது. அதுபோல கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மென்பொருள் போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகள் இங்கே அதிகம் தான்.

இதனால் வேலைவாய்ப்பு தேடி இங்கு வருபவர்கள், வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லாமல் வட இந்தியாவில் வேலை செய்துகொண்டு பணியிட மாறுதல் காரணமாக இங்கு பலர் வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு நம்ம ஊர் சாப்பாடு மிகவும் பிடித்துவிடுகிறது. ஆரம்பத்தில் எனக்கு எதற்கெடுத்தாலும் சப்பாத்தியை வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் நாளடைவில் நமது இட்லி, தோசை , பூரிக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

அப்படி இந்தியா முழுவதிலும் நமது சாப்பாடுகளை சாப்பிட ஆட்கள் அதிகம் இருப்பதால் தான் நம்ம ஊர் ரெஸ்டாரன்ட்கள் நாடு முழுவதும் பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்ம ஊரு சாப்பாட்டுக்கு ரயிலடிக்கு கூட கிராக்கி இருக்காது. ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. டெல்லியில் கூட ஒரு சில ஸ்டேஷனில் இட்லி, நம்ம ஊர் இட்லியைப் போலவே நன்றாக இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் வட இந்தியர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தென்னிந்திய சாப்பாடு வகைகளை விரும்பி உண்ண ஆரம்பித்து இருக்கிறார்கள். அதுவும் இட்லி, இடியாப்பம், தோசை போன்ற எளிதில் செரிமானமாகும் விஷயங்கள் உடலுக்கும் நல்லது என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் பரவலாக கருத்து கூறப்படுவதால் அதை அவர்களும் விரும்பத் தொடங்கி இருக்கிறார்களாம்.

ஒரு தனிப்பட்ட சுவையை நமது நாக்கு பழகுவதற்கு சில நாட்கள் பிடிக்கும். எப்படி வட இந்தியர்கள் நமது உணவை இப்போது ருசித்து உண்ண துவங்க இருக்கிறார்களோ...?

நாம் அவர்கள் உணவை உண்ணத் தொடங்கி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகப்போகிறது. ஆம் இதற்கு முன்னால் இந்த பன்னீர் பட்டர் மசாலா, நான், புல்கா, போன்றவை நமது ஹோட்டல்களில் கிடைக்கவே கிடைக்காது .

இப்போது அவர்கள் உணவு நமது ஊரில் எப்படி நிறைவாக கிடைக்கிறதோ சிறிது நாட்கள் கழித்து நமது ஊரில் அவர்கள் உணவும், ஹோட்டலில் அதிகமாக கிடைக்கும். அவர்கள் உணவை உண்ண தொடங்கலாம் என்று கூறுவதற்கு பதிலாக அவர்களின் சட்டங்களை நாம் பெறுக்கிறோம். கச்சோரி, பாபாஜி பட பானிபூரி, பேல்பூரி என எல்லாமே வட இந்தியாவிலிருந்து வந்த இறக்குமதிகள் தானே!

நமது பாரம்பரியம் என்று பார்த்தால் வடையும், போண்டாவும் மட்டும்தான். சமோசா கூட அவர்கள் தயாரிப்பு!! எது எப்படியோ இனிமே நம்ம ஊரு சாப்பாடு அங்கெல்லாம் போனா கிடைக்குமா என்ற கவலை நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. இந்தியா முழுவதும் சென்றாலும் நமக்கு இட்லி, தோசை போன்ற விஷயங்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. நாளடைவில் இத்தகைய ரெஸ்டாரண்ட் பன்மடங்கு பெருகும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

அப்புறம் என்னங்க எங்க வேலை பார்க்கலாம் இட்லி சாப்பிடலாம்...!

20 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad