Bluepad | Bluepad
Bluepad
ஸ்டிரஸ் அவ்வளவு கொடுமையானதா?
A
Arvind Kumar
17th Jun, 2020

Shareஸ்டிரஸ் அவ்வளவு  கொடுமையானதா?

இப்போது ஸ்ட்ரெஸ் என்கிற வார்த்தையை மிக அதிகமாக பயன்படுத்த துவங்கி விட்டார்கள். இந்த காலத்து சிறிய குழந்தைகள் கூட டென்ஷன் டென்ஷன் என்று நிமிடத்திற்கு இருமுறை கூறுகிறதாம்!நான் கண்டுக்காமல் விடும் ஸ்ட்ரெஸ், தற்கொலையை தூண்டுவதில் அதி முக்கிய பங்கு வகிக்கிறது...

நம்முடன் பழகுபவர்களின் மனசாட்சிக்கு உள்ளே சென்று நம்மால் பார்க்க கூடிய சக்தி இல்லை.நம்மிடையே சகஜமாக பேசுபவர்களுக்கும் இயல்பாகச் இருப்பவர்களுக்கும் கூட இந்த ஸ்ட்ரெஸ் மிக அதிகமாக இருக்கலாம். எனவே ஒருவரை எப்போதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.

நான் பல பேரை இந்த ஸ்ட்ரெஸ்க்கு உட்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இன்றைய சமூக வலைத்தளத்தில் நாம் பலருக்கு நிச்சயமாக ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். அதாவது ஒரு ஓரளவிற்கு தெரிந்த பிரபலத்தின் பதிவுகளுக்கு கீழே இருக்கும் கமெண்ட்களில் நேர்மறையான கமெண்ட்டுகளை பார்ப்பதே மிக அரிதாக இருக்கும்.

உனக்கு ஏன் இந்த பொழப்பு?
இந்த பொழப்புக்கு நீ எல்லாம் தொங்கலாம் ?
கேவலமா இல்ல??
அசிங்கமா இல்ல ?
என்று பொதுவெளியில் மட்டம் தட்டி தான் பேசி பழகி இருக்கிறோம்.

இந்த மட்டம் தட்டிப் பேசுவது ஒன்றும் பால் வேறுபாடுகள் இருப்பதில்லை. இதில்தான் ஆண் பெண் என்ற பாகுபாடு எல்லாம் களையப்பட்டு தரக் குறைவாகத் தான் பேசுகிறார்கள். ஆண்களும் தரக்குறைவாக தான் பேசுகிறார்கள். ஆனால் அப்படிப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று ஒருவர் இறந்தவுடன் அப்படியே பாசமழை பொழிவதுதான் விந்தையான விதமாக இருக்கிறது.

சாதாரணமாகவே நாம் பிறரை மட்டம் தட்டிப் பேச பழகாமல் இருந்தால்தான் நாம் ஒருவரை உண்மையாக காயப்படுத்தி இருக்கோமா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும். நாம் ஒருவர் மாறி விட்டால் இந்த சமூக மாறிவிடுமா என்ன. நான் ஒருவன் கேவலமாக பேசாவிட்டால் மற்றொருவன் பேசத்தானே போகிறான் என்ற எண்ணம் தான் இத்தகைய அத்துமீறல்களுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த ட்விட்டர், பேஸ்புக் வெளியில் வரும் சண்டைகளுக்கு கூட இதுவேதான் காரணம். ஒருவருக்கு பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கும் ஆனால் அதை வைத்துக்கொண்டு தான் இப்போது ஒரு பெரிய தர்பாரே நடந்து கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்களை விட்டுவிட்டு அவர்கள் குடும்பம் அவர்களின் மூதாதையர் குடும்பம் என்று தோண்டி எடுத்து வாய்க்கு வந்தபடி திட்டுவது இப்போது ஒரு பேஷனாகி வருகிறது.

வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் பாவம் நம் பிள்ளை ஏதோ இன்டர்நெட்டில் பார்த்துக்கொண்டிருக்கிறான், படித்துக் கொண்டிருக்கிறான் என்று ஏமாந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அவன் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைக்கும் அகராதி எழுதி கொண்டிருக்கிறான் இணையதளத்தில்.

சமூக வலைத்தளத்தில் உண்மையான அன்பும் பாசமும் கிடைக்காது. உண்மையான நண்பர்களும் இருக்கமாட்டார்கள். அது ஒரு விசித்திரமான கனவு உலகம் தான். நாம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் கூட ஹா ஹா என்று ஸ்மைலி போட்டு நம்மை வெறுப்பவர்கள் அல்லது நாம் ஒரு வருத்தமான விஷயத்தைப் பதிவு செய்தாலும் கூட "வட போச்சே" " சுண்டல் கிடைக்கலையே " என்று சம்பந்தமே இல்லாமல் கமெண்ட் அடிப்பார்கள்.

எனவே சமூக வளைதளத்தில் உண்மையான அன்பை தேடுவது ஒரு முட்டாள்தனம் தான். நமக்கு நம்முடன் பழகுபவர்கள் நம் குடும்பத்தார்கள் யாருக்கு வேனாலும் இந்த ஸ்ட்ரெஸ் என்பது இருக்கலாம். அவர்களிடம் உண்மையான அக்கறை காட்டுங்கள்.

இந்த சமூக வலைத்தளங்கள் எல்லாம் நமக்கு பொழுதே போகவில்லை என்றால் பயன்படுத்தக்கூடிய ஒரு அம்சம்தான். அதையும் கூட நன்றாக பயன் படுத்துபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

சம்மந்தமே இல்லாமல் யாருடனோ சாப்டீங்களா ? சௌகியமா ? என்று கேட்பதற்கு பதிலாக அந்த கேள்வியை நம்மவர்கள் இடத்தில் கேட்டுப்பாருங்கள். நீங்கள் உண்மையான அக்கறையுடனும் நடந்து கொண்டாலே அது பலரின் ஸ்ட்ரெஸ்ஸை போக்கும் உங்களை அறியாமலேயே...!

உங்களிடம் யாராவது ஒரு விஷயத்தை கூற வருகிறார் என்றால் உண்மையான அக்கறையுடன் இதயத்தை திறந்து காது கொடுத்து கேட்க பழகுங்கள். கையிலிருக்கும் போனாயோ கம்ப்யூட்டரையோ நோண்டிக் கொண்டு அரைகுறையாக கேட்பதால் கூட ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்று நம்மிடமே தினமும் ஒரு இரண்டு மூன்று தடவை பேச முயற்சி செய்து பாருங்கள். நமக்காக நாம் மாறிவிட்டால் நாம் எந்த கட்டாயத்துக்கு உட்படாதது போல ஒரு அருமையான உணர்வு ஏற்படும்.

நாம் யாருக்காகவும் நம்மை குறைத்து மதிப்பிட தேவை இல்லை. பிறரை சந்தோஷப்படுத்த முயற்சி செய்வோம் முடியாவிட்டால் விலகி இருப்போம் யாரையும் நாம் காயப்படுத்த வேண்டாம். எந்தவிதமான காயங்கள் ஏற்பட்டாலும் அதற்கு தற்கொலை என்பது தீர்வு ஆகாது. இதை பலமுறை பல பேர் கூறினாலும் கேட்பதாக தெரியவில்லை. அதுவும் குறிப்பாக 20 வயது 40 வயதுக்குள் இருப்பவர்கள் பொசுக்கு பொசுக்கென்று இந்த தற்கொலை முடிவை தேடி சென்று விடுகிறார்கள்.

இதற்கு காரணம் வாழ்வில் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்கின்ற ஒரு விதமான எண்ணமே. ஏமாற்றங்களை பழகிக்கொள்ளவேண்டும் ஏமாற்றங்களை சகித்துக்கொள்ள வேண்டும், மாற்றங்களை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை நிமிடத்தில் முடித்துக் கொள்ள முடியும் ஆனால் அப்படி முடித்துக் கொள்பவர்கள் சார்ந்தவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே கஷ்டம். முடித்துக் கொள்பவர்களுக்கு அது ஒரு நொடி நேர வலி தான் ஆனால்... அவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு , அது இந்த வாழ்க்கை முழுவதும் பெரிய வலியை தான் கொடுக்கும்.

எளிமையான இரெண்டே விசயங்கள் தான்... நம் மனதையும் நாம் பயப்படாமல் பாத்துகொள்ள வேண்டும் , நம்மை சார்ந்தோர்களை கைவிடக்கூடாது. நம் மனதை போன்று நாம் பிறர் மனத்தையும் நோகடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இது போதும் .. அந்த மாற்றத்தை இனிதே துவங்குவோம்...

தயவுசெய்து கமெண்ட், லைக் பண்ணவும்

16 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad