Bluepadஇலைதேடும் வெட்டுக்கிளிகள்
Bluepad

இலைதேடும் வெட்டுக்கிளிகள்

கி.இலட்சுமி
17th Jun, 2020

Share


இலைதேடும் வெட்டுக்கிளிகள்

*************************************
எட்டுத் திக்கும் போரிட்டத் தமிழர் இனம்/
குட்டுப்பட்டு குனிந்து நிற்குமோ
வெட்டுக்கிளியிடம்/

அந்நியர் படையெனத் திரண்டு வராதே/
குந்தியே நெற்கதிர்களைத் தின்று விடாதே/

உறையிலிட்ட உணவை உண்டுக் கொழுத்தவர்கள்/
அறையில் அடைந்து வெம்பிப் போனார்கள்/

அகப்பை நிறைத்தவனைக் கேலி செய்தவர்கள்/
அகங்காரம் அழிந்து கையை ஏந்தினார்கள்/

சுயநலத்தின் கைப்பிடிக்குள் இயற்கையை நசுக்கினோம்/
செயற்கை சுவாசத்தில் திணறிக் கொண்டிருக்கிறோம்/

கொல்லும் வைரசோ முற்றுகையிட்டுச் சுற்றுகிறது/
சொல்லவொணாத் துயரத்தில் தேசமே அழுகிறது/

வறுமை நோயது ஏழைகளைப் பற்றுகிறது/
வயிற்றுப் பசியோ உயிர்களைக் கொத்துகிறது/

சிட்டுக்குருவிகளைக் காணாமல் போகச் செய்தோம்/
பட்டுப்போன மண்ணில் இயலாமையை விதைக்கிறோம்/

விவசாயி கண்ணீரே மழைநீராய் ஆச்சு/
விளைநிலங்கள் எல்லாம் விலையாகிப் போச்சு/

மிச்சமிருக்கும் பயிர்களைக் கொள்ளை அடிப்பாயோ/
மொத்தமாய் எங்களைக் கொண்டு செல்வாயோ/

ஆண்டவரெல்லாம் சுரண்டியதில் ஆண்டிகள் ஆனோம்/
மாண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்/

இலை தேடும் வெட்டுக்கிளியே விலகிப்போ/
அலை தாண்டி எம்தேசத்தைக் கடந்துபோ/

கருணை இருந்தால் எல்லை தாண்டிடு/
கொரோனா கிருமியையும் கூட்டிச் சென்றிடு.
கி.இலட்சுமி, சென்னை.








20 

Share


Written by
கி.இலட்சுமி

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad