BluepadOTT தளங்கள் காலத்தின் கட்டாயமா ?
Bluepad

OTT தளங்கள் காலத்தின் கட்டாயமா ?

A
Abhishek J.
17th Jun, 2020

Share


இந்த ஓ. டி. டி தளங்கள் மிகப் பிரபலமாகத் துவங்கியது சில வருடங்களுக்கு முன்பு தான். அதுவும் நாம் இன்று அதிக எண்ணிக்கையில் டேட்டாக்களை உபயோகித்து தள்ள துவங்கினோமோ அப்போதிருந்தே இந்த O T T தளங்களில் வளர்ச்சி மேலோங்கி காணப்பட்டது.

ஓ டிடி என்றால் ஓவர் டு த ஏர் என்று கூறுகிறார்கள். அதாவது வெறும் இணையதள வசதி மட்டும் இருந்தாலே போதும். இந்த தளங்களை இயக்க முடியும் என்பதுதான் அதற்கு அர்த்தம்.

சில நாட்களாக இந்த கொரோனா பொது ஊரடங்கினால் தான் பெரிதும் துன்பப்பட்டு வருகிறோம். அந்த நேரங்களில் நமக்குப் பெரிதும் ஆறுதலாக விளங்கியது இத்தகைய தளங்கள் தான்.

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் , நெட்பிளிக்ஸ் , எம்எக்ஸ் பிளேயர் , அமேசான் பிரைம் போன்றவைகள் இல்லாமல் பொழுதை கழிக்க முடியும் என்று தோன்றவில்லை.

அப்போது அந்த தலங்கள் ஒரு படி மேலே இருந்து திரையிடாமல் காத்திருக்கும் படங்களை திரையிடவும் துவங்கிவிட்டார்கள். இந்த திட்டத்தை முன்பே விஸ்வரூபம் படம் சமயத்தில் கமலஹாசன் அறிவித்தார். அவரது படங்களை DTH போன்ற வைகள் மூலமாக வெளியிடலாம் என்று...

ஆனால் அப்போது தயாரிப்பாளர்களும் , திரையரங்கு உரிமையாளர்களும் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் இன்று இதே தளங்கள் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. தற்போது பொன்மகள்வந்தாள், பெண்குயின், சூரரைப்போற்று போன்ற படங்கள் வரிசையாக இத்தகைய தளங்களில் வெளிவர இருக்கிறது.

ஆனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். எல்லாருமே படத்தை அப்போது பார்த்து விட்டால் நாங்கள் எங்கு செல்வது நாங்கள் சினிமாவை நம்பி தான் இத்தகைய முதலீடுகளை செய்து இருக்கிறோம். ஆனால் எங்களை சினிமாக்காரர்களை மோசம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று கூறி வருகிறார்கள்.

அவர்கள் கூறுவதிலும் ஒரு பக்கம் நியாயம் இருக்கிறது... ஆனால் திரையரங்கம் டெலிவிஷன் வந்தவுடனே பாதிக்கப்படும் என்றெல்லாம் கூறினார்கள். டிவி வந்து விட்டால் யாரும் திரையரங்குக்கு வரவே மாட்டார்கள் என்று ஆணையிட்டுக் கூறினார்கள்.

ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது ஒரு படத்தை திரையரங்கில் பார்த்து பழகியவர்கள் , திரையரங்கில் தான் பார்த்தால் பிடிக்கும் என்று முடிவுகட்டி விட்டவர்கள் என்ன ஆனாலும் எங்களுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் மற்ற சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறு இந்த ஓட்டிட்டு இதில் படங்களை வெளியிட்டவர்களை கடுமையாக சாடியும் வருகிறார்கள் இனி உங்கள் படங்களை திரையரங்கத்தில் வெளியிட விடமாட்டோம் நீங்களா நானா பார்த்து விடலாம் என்பது போன்ற சொற்போர்கள் முளைத்திருக்கிறது.

ஆனால் இதை எத்தனை நாளைக்குத்தான் தள்ளிப்போட முடியும் என்று தெரியவில்லை. முன்னாளில் பிலிம் ரோல்கள் இருந்தது ஆனால் இப்போது ரோல்கள் கிடையாது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சினிமாக்கள்தான். சினிமாவும், சினிமா துறையின் திரையரங்குகளும் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறி தான் வருகிறது.

2D யாக மட்டுமே பார்க்க முடிந்த படங்கள், தமிழ் சினிமாவில் டூ பாயிண்ட் ஓ ( 2.0 ) என்ற ஒரு சினிமா வந்தவுடன் 3D யாக சட்டென்று மாறியது. எத்தனை பேர் இவ்வாறு ஓ. டி. டி யில் பார்க்க விரும்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே அவ்வாறு வெளியிடப்பட்ட படம் ஒன்றுக்கு பெரிதாக ஒன்றும் பார்வையாளர்கள் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வருகிறது.

என்ன ஆனாலும் இது ஒரு காலத்தின் மாற்றமே. மக்களின் ரசனைகள் மட்டும் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். மக்களின் எண்ணங்களை அப்படியே பிடித்துக் கொண்டு அவர்களை ஈர்ப்பவர்கள்தான் சாதிக்கிறார்கள் அல்லது வெற்றி பெறுகிறார்கள்.

மிக குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்களை இவ்வாறு தலங்களில் நேரடியாக வெளியிடுவதன் மூலம் பலரிடம் சென்று அடையும். அதே நேரத்தில் போட்ட காசை எடுத்து விடலாம் என்ற வித்தையும் இப்போது கையாளப்படுகிறது.

ஆனால் போகப் போக எல்லாமே மாற வாய்ப்பு இருக்கிறது. நாம் இதன் வளர்ச்சியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 

Share


A
Written by
Abhishek J.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad