Bluepadஒருவர் மரணித்த பின்பும் இத்தனை கதைகள் அவரை பற்றி!! எங்கே போனது நமது மனசாட்சி…
Bluepad

ஒருவர் மரணித்த பின்பும் இத்தனை கதைகள் அவரை பற்றி!! எங்கே போனது நமது மனசாட்சி…

R
Reshma us
16th Jun, 2020

Shareநமது ஊர் கட்டுக் கதைகளுக்கு பேர் போனது தான். அது குழந்தைக்கு சாதம் ஊட்டுவது முதல் துவங்கியது என்றே கூறலாம். சாப்பிடாவிட்டால் பூச்சாண்டி வந்து பிடித்துக் கொண்டு போவான் என்பது கூட ஒரு காரணம் கட்டுக்கதை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது இந்த பழக்கம் பல்கிப் பெருகி ஒரு பெரிய புற்று நோய் போல ஆகிவிட்டது.

ஒரு ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்களை பரப்புவது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா...! ஆனால் நம்மூரில் அதற்கு கிசுகிசு , வதந்தி , காசிப் என்று கவர்ச்சிகரமாக பெயர்களை வைத்து அதை பரப்பி விடுகிறார்கள்.

சென்றவாரம் பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் . தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் மகேந்திர சிங் தோனி ஆகவே நடித்த அவர், வாழ்வின் ஏமாற்றங்களை பொறுத்துக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அது முதல் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கட்டி விட துவங்கிவிட்டார்கள்...!

இது தொலைக்காட்சி, ரேடியோ, இணையதள ஊடகம் என்று எங்கும் பரவி கிடக்கிறது. ஒரு மனிதனின் உயிர் இழப்பை கூட எல்லோரும் லாவகமான ஒரு வியாபாரமாக பயன்படுத்தி வருகிறார்கள். நேற்று சானியாமிர்சா வெளியிட்ட அறிக்கைக்கு கூட கிளுகிளுப்பான ஒரு தலைப்பை வைத்து "எனக்கு கொடுக்கிறேன் என்று சொன்னதை கொடுக்காமலேயே சென்று விட்டாயே" என்று விளம்பர படுத்துகிறார்கள்.

அவர்கள் உலக தாதாவாக இருந்தார் கஞ்சா விற்றார் அதில் பண நெருக்கடி ஏற்பட்டு மன உளைச்சல் காரணமாக இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி. அவரின் மேலாளர் சிறிது நாட்களுக்கு முன்புதான் இறந்தார், அவருக்கும் இவருக்கும் ஏதோ தொடர்பு அதனால் அவர் முதலில் இறந்த அந்த பிரிவை தாங்க முடியாமல் இவர் இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி.அவர் சார்ந்த மதத்தைச் வைத்து ஒரு நய்யாண்டி செய்தி என அடுக்கடுக்காக அவர் மீது வன்மத்தை கக்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

செய்திகள் என்பது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இன்றைய காலக்கட்டத்தில் போட்டியினால் சூடான செய்தி, சுவையான செய்தி, தலைப்பு செய்தி, விருவிருப்பான செய்தி என்று அது பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம்.

ஆனால் ஒருவரின் மரணத்தின் பின்னால் இத்தனை ஊர்ஜிதம் அற்ற செய்திகள் வருவது நமது ஊடகத்துறை மேலே உள்ள மரியாதையை குறைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவர் நடித்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு தான் களங்கம் ஏற்படும் என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். இது அவரின் தனிப்பட்ட முடிவு நியாயமற்ற முடிவு தான் இருந்தாலும் கூட இவரின் முடிவினால் அவருக்கு எப்படி பாதிப்பு ஏற்படும் என்று புரியவில்லை!

யாரும் தற்கொலையை ஆதரிக்க மாட்டார்கள் ஆனால் இது போன்ற பிரபலங்களை தற்கொலை செய்துகொள்வது அதை சார்ந்து இத்தகைய செய்திகள் வருவதினால் பலர் பரவாயில்லையே தற்கொலை செய்து கொண்டால் உலகம் எப்படி எல்லாம் பேசுமா என்று கூட நினைத்து அந்த முடிவை தேடிப் போகலாம். இதுவும் கூட ஒரு மறைமுக தற்கொலை தூண்டுதலாக வடிவெடுக்கிறது.

இப்படி கட்டுக்கதைகளை நான் கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அதுவும் சினிமா சார்ந்தவர்கள் விவாகரத்து செய்து கொண்டால் வரும் செய்திகள் இருக்கிறதே அப்பப்பா ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கதை சொல்லும். ஒரு பத்திரிக்கை நடிகருக்கு கள்ளக்காதல் என்று கூறும் இன்னொரு பத்திரிக்கை அந்த நடிகரின் மனைவி கள்ளக் காதல் என்று கூறும் அவர்களின் குடும்ப கதையை பெரிதுபடுத்தி பெரிது படுத்தி அவர்களை பிரித்து வைத்து விடுகிறார்கள்.32 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad