Bluepadநமது சொந்த ஊர் , கிராமங்களிலிருந்து வேலை செய்யும் கனவு நினைவாக போகிறது!
Bluepad

நமது சொந்த ஊர் , கிராமங்களிலிருந்து வேலை செய்யும் கனவு நினைவாக போகிறது!

A
Ananth A.
16th Jun, 2020

Share



சொந்த ஊரையோ , பிறந்த ஊரையோ யாருக்கு தான் பிடிக்காது. அப்படிப்பட்ட சொந்த ஊர்களிலிருந்து நாம் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை செய்ய முடியும் என்றால் யாராவது அந்த ஊர்களை விட்டு வருவார்களா வரத்தான் வாய்ப்பு இருக்கிறதா?

வேலைவாய்ப்புத் திட்டத்தினால் தானே சிறு நகரங்கள் எல்லாம் பெருநகரங்கள் ஆகிவருகிறது அவர்கள். கூட்டம் கூட்டமாக கிராமத்தை காலி செய்வதற்கு வேலைவாய்ப்பின்மை தானே காரணம்.

முன்புபோல விவசாயம் லாபகரமான தொழிலாக இருப்பதில்லை. விவசாயம் செய்பவர்களும் கடன் மேல் கடன் வாங்கி கடைசியில் அந்த இடத்தை வந்த விலைக்கு விற்று விட்டு நகரங்களை நோக்கி வந்து விடுகிறார்கள்.

நகரங்களிலும் வாழ்க்கை சற்று நரக வேதனையை தருகிறது. இடநெருக்கடி, சுவாச நெருக்கடி, மனம் கூட நெருக்கடிதான். பணம் மட்டும் கிடைக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு நம் சொந்த ஊர்களில் வாழும் நிறைவான வாழ்க்கையை கொஞ்சம் கூட இங்கு வாழ முடியாது.

ஊரில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வைத்திருப்பவர்கள் இங்கு ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகை இருப்பதற்கு ததிங்கிணத்தோம் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மென்பொருள் வல்லுனர்கள் இப்போது இந்தப் பொது ஊரடங்கில் அவரவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்தார்கள் அல்லவா அந்த திட்டம் ஓரளவிற்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு பிடித்த சூழ்நிலைகளில் வேலை பார்த்தால் வேலையை மிக நன்றாக செய்வதாக உணர்ந்திருக்கிறார்கள் இந்த துறை நிபுணர்கள்.

ஆனால் இதற்கான அடிப்படை திட்டங்கள் மட்டுமே இப்போது தீட்டப்பட்ட வருகிறது. கிராமங்களிலிருந்து வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கான இன்டர்நெட் வசதிகளும் அந்த வீடுகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு மேலும் சிறிது காலம் தேவைப்படும்.

அது சோதனை முறையில் செய்து பார்த்து வருகிறார்கள். அந்த திட்டம் வெற்றி அடைந்துவிட்டால் அவர் அவர்கள் தமது சொந்த ஊரிலிருந்தே வேலை செய்யத் துவங்கலாம். இது முதலில் இந்த தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களுக்கு கைகூடும்.

மனிதர்கள் நேரடியாக வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லாத துறைகளுக்கு தான் இந்தத் திட்டங்கள் முதலில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதனால் நிறுவனங்களுக்கு எக்கச்சக்க லாபம் இருக்கிறது. ஆட்களை வரவழைத்து செய்யும் போக்குவரத்து செலவு அந்த கட்டடங்களுக்கான வாடகை என்று எக்கச்சக்கதக்கு செலவு செய்யத் தேவையில்லை. அவர்களை தேவைப்பட்டால் மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரவழைத்து பேசி திரும்ப அனுப்பி விடலாம். அவர்களும் ஊரிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் இரு நாட்களில் வந்து திரும்ப சென்று விடலாம்.

பாருங்கள் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது என்று!!

இன்றைய நகர மக்கள் இது தான் சரியான தீர்வு என்றும் கருதுகிறார்கள். சுற்றுச்சூழல் வல்லுனர்கள் ஒரே ஊரில் எக்கச்சக்கம் பேர் அடைப்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் புற்றீசல் போல மக்கள் படையெடுப்பதற்கு காரணம் அவர்கள் ஊரில் வேலை வாய்ப்பு இல்லாத பிரச்சினையை தான். தமிழகத்திற்கு சென்னை என்றால் இந்தியாவிற்கே மும்பை போன்ற நகரம். அங்கு கிட்டத்தட்ட 2 கோடி பேர் வசிக்கிறார்கள்.

இந்த முயற்சிகள் மட்டும் வெற்றியடைந்து விட்டால் மீண்டும் நாம் அனைவரும் அமைதியான ஒரு வாழ்வு முறையை வாழலாம். வேலை நெருக்கடி இருக்கத்தான் செய்யும் ஆனால் நமது சூழ்நிலையில் இருந்து வேலை செய்யும் போது அந்த நெருக்கடி அவ்வளவு ஒன்றும் கஷ்டமாக இருக்காது என்று கருதுகிறார்கள்.

பார்ப்போம்...! இது அனைவரின் நெடுநாளைய கனவு அது விரைவில் கைகூடும் என்று நம்புவோம்.

9 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad