Bluepadபெண் சிசுக் கொலைகள்… இன்றும் தொடரும் அவலம்.
Bluepad

பெண் சிசுக் கொலைகள்… இன்றும் தொடரும் அவலம்.

S
Senthil Rajan
15th Jun, 2020

Share

இந்த கொடுமைகளுக்கு என்ன காரணம்:




நமது நாட்டில் இன்றளவும் கூட பெண் சிசுக்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட இந்திய குக்கிராமங்களில் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்குழந்தை அதிர்ஷ்டம் அற்றது என்கின்ற மூடநம்பிக்கையே இத்தகைய வன்முறைகளுக்கு காரணம். அதும் நமது நாட்டில்... பராசக்தி, தேவி, காளி ,என்று பெண் தெய்வங்களை வணங்கும் தேசத்தில் இது நடப்பது தான் வெட்கக்கேடு!

மேலும் சிலர் பெண் குழந்தை பிறந்தால் அதை இன்னொருவருக்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் அதற்கு செலவாகும் பிறகு சீர் செய்ய வேண்டும் என்று நொண்டி சாக்கு கூறுகிறார்கள்.

உயிர்வதை கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நமது நாட்டில் பச்சிளம் குழந்தைகளை கொல்ல இவர்களுக்கு எப்படி மனது வருகிறது. என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம்.

உண்மை நிலவரம் என்ன...? :

அரசாங்கமும் பெண்சிசுக்கொலை தண்டனைக்குரிய குற்றம் என்று கடுமையாக தான் வலியுறுத்துகிறது. விழிப்புணர்வு கூட்டங்களும் பிரசாரங்களிலும் ஈடுபடுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பே அது என்ன குழந்தை என்று ஸ்கேன் செய்யும் டாக்டர்கள் சொல்லக்கூடாது என்று கண்டிப்பான சட்டம் இருக்கிறது.

இருந்தும் இத்தகைய குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் பணத்திற்காக பேராசைப்பட்டு இத்தகைய குற்றங்களுக்கு துணை போகின்றனர். இதன் விளைவு அப்பாவி பச்சிளம் குழந்தைகள் மரணம்..

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் முன்யோசனை இன்றி செயல்பட்டு அப்பாவி குழந்தைகளை கொல்ல போகிறார்களோ தெரியவில்லை.

இன்றும் கூட ஒரு சில பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை நடத்துவது போல பெண் பிள்ளைகளை நடத்துவது இல்லை.நமது தேசத்திற்கு பாரதமாதா என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள் , நம்மை தாங்கும் பூமியை பூமாதேவி என்று அழைக்கிறார்கள் , புண்ணிய நதிகளுக்கு காவிரி, கங்கை, யமுனை சரஸ்வதி என்ற பெண் பெயரால் அழைக்கிறார்கள்... ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அதை சிதைக்கிறார்கள் என்ன ஒரு மடமை!

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு வயதான விவசாயிக்கு 5 பிள்ளைகள், அதில் நான்கு ஆண் குழந்தைகள் கடைசியாக பிறந்தது பெண் பிள்ளை.

அவர் கடைசி பிள்ளையும் கூட ஆண்பிள்ளையாக தான் பிறக்க முயற்சி செய்தாராம் …! ஆனால் பெண்ணாக பிறந்து விட்டது. அந்த குழந்தையை கொல்ல அந்த குழந்தையின் தாயார் சம்மதிக்கவில்லை. அந்த குழந்தையை கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது. காலத்தின் கோலம் நான்கு பிள்ளைகளும் படித்து விட்டு வெளியூர்களில் மற்றும் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

அவரை கடைசிக்காலத்தில் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டது அந்தப் பெண் குழந்தைதான். இதை நன்கு உணர்ந்த அந்த பெரிய மனிதர் இப்போது அரசாங்க விளம்பரங்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.பெற்றோர்களே கடைசிக்காலத்தில் காப்பாற்றுவது பெண் குழந்தை தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.இதில் என்ன கொடுமை என்றால் இத்தகைய பாதக செயலுக்கு பெண்கலே துணை போவதுதான். நாட்டில் நடக்கும் பாதி சிசுக் கொலைக்கு அந்த வீட்டுப் பெண்களே காரணம் அல்லது உடந்தை.

பெண்ணாக பிறந்து விட்டு எப்படி பெண் குழந்தைகளை கொல்ல மனம் வருகிறது என்றுதான் புரியவில்லை. இன்று எத்தனையோ பெண் குழந்தைகள் நன்றாகப் படித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். எத்தனையோ பெண் குழந்தைகள் திருமணம் ஆகி சென்றும் கூட பெற்றவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் நம் நாட்டில் பெண் சிசுக் கொலைகள் முற்றுப் பெற வேண்டும் இதுதான் அனைவரின் விருப்பமும்.

பெண்கள் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள். அரசியல் ,விஞ்ஞானம் , கலை , கல்வி என்று எல்லாவற்றிலும் தடம் பதிக்க துவங்கிவிட்டார்கள். பெற்றோர்களே பெண் சிசுவை ,கொள்ளாதீர்... கொள்ளவும் அனுமதிக்காதீர்...

16 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad