Bluepad | Bluepad
Bluepad
ஆண் மகனாக இருப்பது எளிதல்ல !
A
Ananth A.
15th Jun, 2020

Share


ஆண் மகனாக இருப்பது எளிதல்ல !


ஆண்கள் மிகவும் குறைத்து மதிப்பீடு செயப்படுகிறார்கள் . அவர்களுக்கு அவர்களின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைப்பதே அரிது . படித்து முடித்து வேலைக்கு போவதற்கு முன்னரே பல படிப்பினைகளை பெற்றுவிடுகின்றனர் . தங்கையின் திருமணத்திற்காக அவள் பத்தாம் வகுப்பு நெருங்குவதற்கு முன்னரே சேமிப்பை தொடங்கும் கோடிக்கணக்கான அண்ணன்கள் உண்டு நம் பாரதத்தில் …

சிகரெட் பிடிப்பதாலும் , உற்சாக பானம் அருந்துவதால் மட்டுமே ஒன்றும் அவன் முழுவதும் கெட்டுவிடப் போவதில்லை. உள்ளபடி சொல்லப்போனால் தன் நிலையை மிகவும் நன்றாகவே அறிந்தவர்கள் ஆண்கள்.

வேலைப் பார்க்கும் இடத்தில் என்னற்ற நெருக்கடிகளை சமாளித்து , அதை கொஞ்சம் கூட வீட்டில் காட்டிக்கொள்ளாமல் இருப்பது எளிதே இல்லை . பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த விரும்பாத , வெளிப்படுத்தவும் தெரியாத ஒரு விசித்திர பிறவிகள் …

ஆண்கள் அழுவதே இல்லை என்கிற ஒரு பிம்பம் உண்டு , ஆம் வெளிப்படையாக அழுது விட்டால் தன்னைச் சார்ந்தவர்கள் தவித்து போய்விடுவார்களே என்கிற நோக்கமே காரணம். “ட்ரைன் டு பூசன்” என்கிற ஒரு கொரிய மொழி படம் பார்த்தேன் , அப்படம் ஒரு விசித்திர உணர்வைத்தந்தது.

அப்பாவுடன் வளரும் பெண் குழந்தை , அவரை விரும்பாமலே இருக்கின்றார் . அப்பாவோ ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவர் , ஊழியர்களுடன் சற்று கடுமையாகவே நடப்பவர் . பெண் குழந்தை தன்னை அம்மாவிடம் விட்டுவிட சொல்லிவிடுகின்றாள் …

அவளைக் பூசன் நகருக்கு கொண்டு விட சம்மதிக்கிறார் தந்தை , ஆனால் அவர்கள் பயணம் துவங்கிய சில நேரத்திலே அது வாழ்வா சாவா பயணமாக மாறிவிடுகிறது . “ஜாம்பி” எனப்படும் ஒரு வகை மனித மிருகங்கள் அந்த ரயிலில் பரவ பரபரப்பு தொற்றுகிறது …

அந்த ஜாம்பிகள் கம்பாட்மென்ட் கம்பார்ட்மெண்ட்டாக பரவ , முடிந்த அளவு அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றனர் .இந்த வாழ்க்கைப் போராட்டம் நடைபெறுகியில் தான் மகளுக்கு அப்பாவின் அருமைப் புரிய வருகிறது . ஒருகட்டத்தில் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட , ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதே பெரும் போராட்டமாக மாற , ஊர்முழுக்க அந்த மிருகங்கள் பரவ , அவர்களை சுட்டு வீழ்த்த ராணுவ வீரர்கள் மறுபக்கம் தீவிரம் காட்ட ..

இறுதியில் மகளைக் காப்பற்ற தந்தை உயிர் துறக்கின்றார் … அந்த பெண் குழந்தை மனம் உருகி பாடியவாறே பாதுகாப்பான பகுதிக்கு தாயாருடன் செல்கிறார் .அப்படத்தில் வரும் நாயகனின் வாழ்க்கையே இங்கு பல ஆண்கள் வாழ்க்கையும் , அவர்களின் சிக்கல்கள் , நெருக்கடிகள் , மனக்குமுறல்கள் , திட்டங்கள் யாவையும் சற்று தாமதமாகவே புரிந்துகொள்ளப் படுகிறது .

ஒரு ஆண் அவனுக்கான வாழ்க்கையை இறுதிவரை கூட வாழ முடியாமல் அவதி படுகிறான். அவனை புரிந்துகொள்ள அவனது குடும்ப உறுப்பினர்கள் கூட முயற்சி செய்வதே இல்லை . வெகு சில உறவுகள் தான் புரிந்துகொள்ள முயற்சியாவது செய்கின்றார்கள்.

நமது சினிமாக்களில் காட்டப்படுவதை விட அநேகமான ஆண்கள் தியாக சொரூபிகளாக தான் இருக்கின்றார்கள். திருமணத்திற்க்கு முன்னும் பின்னனும் அநேகமான ஆண்கள் அப்படியே மாறி விடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு . அதுவும் தகப்பனாக மாறும் தருணத்தில் அவனும் அந்தக் குழந்தை போல மீண்டும் பிறக்கின்றான்.அங்கு ஆரமிக்கிறது அவனுடைய சுகமான சுமைகள் !! தனது மனத்திலும் , மூலையிலும் அந்த சிசுவை தனது குடும்பத்துடன் சேர்த்து சுமக்க துவங்குகிறான்.

அதுவரை வம்பு தும்புக்கு அஞ்சாதவன் , அடங்கி பேச துவங்குவான் !! எந்த வேலையையும் நிலையாக பார்க்காதவன் , பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்ற துவங்குவான் . செலவுசெய்யவே தயங்காதவன் ., முதல் முறையாக சிக்கனத்தைப் பற்றியும் சேமிப்பைப் பற்றியும் எண்ணுவான்.

17 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad