Bluepadசாவு அல்லது மரணம்.
Bluepad

சாவு அல்லது மரணம்.

O
OrionMohan
29th Nov, 2021

Share

மரணத்தின் வார்த்தையே , பதவியும், பணத்தையும் பொருத்து மாறுபடும்.

பதவி பணம் மிக்கவர்கள் இறந்துவிட்டால்
பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சொல்வது
அந்தத் தலைவர் மரணம் அடைந்தார், இறந்தார், இயற்கை எய்தினார் , போன்ற நாகரீகமான வார்த்தைகளை உபயோகப் படுத்துவார்கள்

ஆனால் நம்மைப் போன்று நடுநிலையை சார்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாதாரணமானவர்கள் இறந்தால் சாவு என்றுதான் செய்தி வரும்.

நன்றாக பத்திரிகைகளை படித்துப்பாருங்கள் . மரணத்திலும் வார்த்தைகள் பணத்தையும், பதவியையும் பொறுத்து மாறுகிறது .

புகழும் ,பதவியும், பணமும் உள்ளவர்களுக்கு உண்டான வார்த்தை மரணம் அடைந்தார். இயற்கை எய்தினார்.

நமக்கு சாவு என்று எழுதுவார்கள்.

உதாரணமாக நடுநிலை குடும்பத்தைச் சார்ந்த நமது சாதாரண பொதுமக்கள் நண்பர்கள் விபத்தில் இறந்தால். அனைவரும் சாவு குடும்பத்துடன் சாவு. என்றுதான் மனிதாபிமானம் இல்லாமல் பத்திரிகை எழுதும்.

அதே போல் பதவியும் பணமும் மிக்க உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் செத்தால் மரணம் அடைந்தார். இறந்தார், இயற்கை எய்தினார்.இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள்.

நோயினால் அதிகாரி மரணமடைந்தார் ,அமைச்சர் இறந்தார், இயற்கை எய்தினார்.
நோயினால் மக்கள் சாவு.விபத்தில் இருவர் சாவு.

ஆகவே இளைஞர்கள்பெற்றோரின் பேச்சைக் கேட்டு முன்னேறுவதற்கான வழிகளை பாருங்கள்.
முன்னேறாமல் இருந்தால் மரணம் என்ற வார்த்தை கூட வருங்கால இளைஞர்களை மதிக்காது.



11 

Share


O
Written by
OrionMohan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad