Bluepad | Bluepad
Bluepad
சம்பளத்தை அள்ளித்தருகிறதா அனிமேஷன் துறை
S
Shankar
14th Jun, 2020

Shareசம்பளத்தை அள்ளித்தருகிறதா அனிமேஷன் துறை

அனிமேஷன் எங்கு படிக்கலாம்:

அனிமேஷன் துறை என்பது நாளுக்கு நாள் பல பரிமாணங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது முதலில் இரு பரிமாணங்கள் ஆக இருந்தது பிறகு முப்பரிமாணம் ஆக மாறி இன்று 6 , 7 பரிமாணங்களை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அனிமேஷன் துறைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் மட்டுமே அதுவும் அரிதாக எடுக்கப்படும் சினிமாவில் மட்டுமே இந்த அனிமேஷன் என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது., ஆனால் இன்று அப்படியல்ல ஒரு சினிமாவில் இடம்பெறும் காட்சி தத்ரூபமாக இருக்கிறது என்றால் அதற்கு அனிமேஷன் துறை மிக முக்கிய பங்கு வகுக்கிறது முன்பெல்லாம் படத்தில் கிராபிக்ஸ் , ஸீஜி இதுபோன்ற விஷயங்கள் அப்பட்டமாக தெரியும் ஆனால் தற்போது நம்மால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு வசதிகள் பெருகி விட்டது.

அதனால்தான் மேலைநாடுகளுக்கு ஓரளவிற்கு நாம் சமமாகவாவது இந்த அனிமேஷன் ஜாலங்களை புரிய முடிகிறது. உடனே நீங்கள் அவதார் படத்தை மனதில் வைத்துக்கொண்டு கற்பனை செய்து பார்க்கக் கூடாது நமது தமிழ் சினிமாவில் வரும் முந்தைய கிராபிக்ஸ் காட்சிகளில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளை ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கு எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறோம் என்பது கண்கூடாக தெரியும்.

எந்த ஒரு துறை வளர்ச்சி அடைந்தாலும் அந்தத் துறைக்கான படிப்பை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம் என்று சந்துக்கு சந்து கடைகளைத் திறந்து உட்கார்ந்து விடுகிறார்கள் அது எல்லா துறைக்கும் பொருந்துகிறது ஆக்கவுண்ட் ஆக இருந்தாலும் சரி டாலியாக இருந்தாலும் சரி ஒரே ஒரு ஏரியாவில் 10 க்கு மேற்பட்ட இடங்கள் இருக்கிறது .

எங்கு கற்றுக் கொள்கிறோம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற குழப்பமும் அதிகரித்தே காணப்படுகிறது. யாரைக் கேட்டாலும் நாங்கள் தான் இன்று நம்பர் ஒன் என்றுதான் கூறுவார்கள்.

இத்தகைய சூழ்நிலைகளில் நாம் இரண்டு மூன்று இடங்களை நன்றாக விசாரிக்க வேண்டும் பணம் ஐந்தாயிரம் பத்தாயிரம் முன்னே பின்னே தான் இருக்கும் காசை அதிகமாக வாங்குபவர்கள் நன்றாக கற்றுக் கொடுத்து விடுவார்கள் என்கின்ற ஒரு குருட்டு நம்பிக்கைக்கு நாம் வந்து விடக்கூடாது.

சென்டரில் கோர்ஸ்களைப் பற்றி தீர விசாரிக்கலாம் இரண்டு மூன்று இடங்களில் விசாரிக்கும்போது பொதுவாக ஒரே விஷயத்தைதான் சொல்கிறார்களா அல்லது வேறுபட்ட தகவல்களை தெரிவிக்கிறார்களா? , கேள்வி கேட்கும்போது சரளமாக தடுமாறாமல் பதில் சொல்கிறார்களா என்பதை விசாரித்து பார்த்தாலே புரிந்துவிடும்.

உங்களுக்கு யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது மிக முக்கியம். எல்லோருமே சொல்வார்கள் இங்கு இந்தத் துறையில் அவர்தான் நிபுணர் அந்தத் துறையில் அவர்தான் நிபுணர் என்று!! இன்று இருக்கும் வசதிகளில் அவரைப் பற்றி நீங்கள் இணைய தளத்தில் சர்ச் செய்து பார்க்கலாம் அந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் நீங்கள் தாராளமாக கற்றுக்கொள்ளலாம்.

பிறகு நம்பகத்தன்மை, ஒரு சென்டரில் நீங்கள் விசாரிக்கும் போது அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் , அவர்களின் நம்பர்களை கேட்கலாம் அவர்களுடன் பேசி இணையதளத்தில் தகவல்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு பல தளங்களில் எல்லா நிறுவனங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. தீர ஆராய்ந்து ஒரு நல்ல முடிவு எடுப்பது தான் சாலச்சிறந்தது கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் படிக்கிறார்கள், இவர்கள் படிக்கிறார்கள் என்று ஆட்டு மந்தை போல் தப்பு தப்பு என்று விழுந்து விடாமல் இது நம்மால் முடியுமா நமது திறமைக்கு ஒத்து வருமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இன்ஜினியரிங்கில் மட்டுமே படிக்கும் கேட் படிப்பை இன்று இன்ஜினியர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் படித்துவிட்டு சும்மாக இருக்கிறார்களாம்.

அனிமேஷன் துறைக்கும் ஒரு சில அடிப்படைத் தேவைகள் இருக்கிறது நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும்., அத்துடன் அனிமேஷன் பற்றிய அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும் இல்லை என்றால் போட்டோஷாப் போன்ற சாதாரணமான டூல்க்ளை பயன்படுத்த ஓரளவிற்கு தெரிந்திருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இது ஒரு மிக கடினமான பயிற்சி ஆகிவிடும்.

இந்த விஷயங்கள் தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் உண்மையாகவே நமக்கு அனிமேஷன் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறதா என்று நம்மை நாமே பலமுறை கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். அரைகுறை ஆர்வத்துடனும் அல்லது ஒரு நப்பாசையுடன் கற்றுக்கொள்ள துவங்கினால் அது எந்த வகையிலும் பயன்தராது.

பெரிய பெரிய அனிமேஷன் கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களில் படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் இருப்பார்கள். அதற்கு அந்த நிறுவனம் மட்டுமே காரணமல்ல கற்றுக் கொள்ளும் விதமும் தான் காரணம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பவர்கள் மட்டுமே சொல்லிக் கொடுத்துவிட முடியாது … அதையும் தாண்டி முயற்சி செய்து எங்கு நாம தவறி விடுகிறோம் என்பதை ஆராய்ந்து மீண்டும் மீண்டும் முயல்பவர்கள் முன்னேறி செல்கிறார்கள்.

உங்களுக்கு ஒரு பெரிய அனிமேஷன் கற்றுக்கொடுக்கும் நிறுவனத்தில் பயில ஆசை இருக்கலாம் ஆனால் அதற்கான வசதிகள் இருக்காது. எனவே நீங்கள் குறைந்த ( உங்களிடம் இருக்கும் காசுக்கு ) கற்றுக்கொடுக்கும் இடங்களில் கற்று கூட கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம் அதற்கு தகுந்தபடி கிடைக்கும் வேலையை வைத்துக் கொண்டு முயன்று முயன்று பெரிய நிறுவனங்களில் படித்தவர்களை தாண்டி நீங்கள் கற்றுக் கொண்டே போகலாம் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
எங்கு படிக்கிறோம் என்பதைவிட எதை நோக்கி செல்கிறோம் என்பது தான் முக்கியம்.


34 

Share


S
Written by
Shankar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad