Bluepadதேர்வு பயம் - மாணவர் தற்கொலை இன்னும் எத்தனை நாளைக்கு தொடர வேண்டும் இந்த கொடுமை?
Bluepad

தேர்வு பயம் - மாணவர் தற்கொலை இன்னும் எத்தனை நாளைக்கு தொடர வேண்டும் இந்த கொடுமை?

A
Abhishek J.
14th Jun, 2020

Share




தேர்வு என்பது வாழ்வில் வரும் மிகச் சாதாரண ஒரு விஷயம் தான் ஆனால் அந்த வயதில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மிகப்பெரிய நெருக்கடி ஆகத்தான் இருக்கிறது, இருந்துகொண்டு வருகிறது.

தேர்வின்போது மாணவர்கள் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாக கருதப்படுகிறது.

ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய தேர்வு முறைகள் பயன்பட்டது. ஆனால் இன்றோ அந்த தேர்வு என்பது ஒரு அத்தியாவசியமாக மாரி உள்ளது. அந்த தேர்வில் தோல்வியை தழுவி விட்டால் அடுத்து நெருக்கடிதான் , வாழ்க்கையே இல்லை, என்பது போன்ற மனோநிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

நிச்சயமாக படிப்பு அவசியம் தான் . தேர்வும் ( படிப்பினை ) தேவையில்லை என்று கூறமுடியாது. இந்த கல்வி வியாபாரம் ஆக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் தேர்வு என்பது தான் ஒரு "செல்லிங் பாயிண்டாக" கருதப்படுகிறது.

எங்கள் பள்ளி மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் , எங்கள் பள்ளி மாணவர் தான் மாநிலத்திலேயே முதல் மாணவர், எங்கள் பள்ளி மாணவர் தான் மாவட்டத்திலேயே முதல் மாணவர்... இப்படி என்று மார்தட்டிக் கொள்ள பள்ளிகள் துவங்கியது அன்று முதல் இந்த தேர்வுக்கான நெருக்கடி பன்மடங்கு அதிகரித்து விட்டது. இதையெல்லாம் ஒழித்துக்கட்ட தான் இப்போது கிரேட் முறையை கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் இந்த தனியார் பள்ளிகளின் மார்தட்டல்கள் இன்னும் குறையவில்லை!!

இப்போது ஒரு பள்ளியில் அதிக சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாவற்றையும் தேர்ச்சி பெற வைத்து விட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

நன்றாக படிக்காத மாணவர்களை தேர்வு ( பொது தேர்வுக்கு ) நடப்பதர்க்கு முந்தைய ஆண்டே வடிகட்டிவிட்டு நன்றாக படிக்கும் மாணவர்களை மீண்டும் நன்றாக தயார் செய்து தான் தேர்விற்கு அனுப்புகிறார்கள்.

நன்றாக படிக்காவிட்டால் இந்த பள்ளியில் நீ தொடரமுடியாது, நன்றாக படிக்காவிட்டால் என்கூட நீ பேசவே கூடாது என்று பெற்றோர்களும் மாணவர்கள் மீது அதிகமாக "பிரஷர்" போடுகிறார்கள். இதனால் காலாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், அரையாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களும் கூட சாகும் முடிவு எடுக்கிறார்கள்.

இது நிச்சயமாக ஒரு துரதிருஷ்டமான விஷயம். சென்ற வருடம் தொடர்ந்து, பிரதமர் தேர்வின் பயத்தை போக்க மக்களிடம் பொதுவாக உரையாடி வருகிறார் இந்த உரையாடல்கள் அந்தத் தேர்வு நடக்கும் இடங்களுக்கு சென்று சேர்கிறதா என்றுதான் தெரியவில்லை.

மனோதத்துவ நிபுணர்கள் துவங்கி சாதாரணமானவர்கள் வரை அனைவரும் தேர்வு பற்றிய பயத்தைப் போக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள் ஆனால் இங்கு நடப்பதோ தேர்வு பற்றிய பயங்கள் அதிகமாக தூண்டிவிட்டு அந்த தேர்வை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றுவது தான் இத்தகைய முடிவுக்கு காரணம்.

இந்த செய்திகளை நாமும் பத்தோடு பதினோராவது செய்தியாக கடந்து சென்று விடுகிறோம் அது அவர்களுக்கு ஒரு பெரிய தவறாக ஆகிவிடுகிறது. சென்ற வருடம் கூட மத்திய அரசாங்கம் ஐந்தாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகளை அறிவித்தது.

அவர்கள் அதற்கு கூறிய காரணம் ஐந்தாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வுகளை எதிர்க்க தொடங்கிவிட்டால்... பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது சாதாரணமான விஷயமாகி விடும் என்று கூறினார்கள். அது ஒரு விதத்தில் நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த நிலைக்கு இன்று மக்கள் தயாராக இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை!!

ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆரம்பித்து விட்டால் பிஞ்சு குழந்தைகளை ஒரு வியாபாரப் பொருளாகவே மாற்ற முயற்சி செய்வார்கள். ஐந்தாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்? எட்டாம் வகுப்பில் இத்தனை மதிப்பெண், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்... என்று அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெறும் மார்குக்காக ஓடும் குதிரையாக ஆக மாற்றி விடுவார்கள்.

7 

Share


A
Written by
Abhishek J.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad