Bluepad | Bluepad
Bluepad
காஞ்சி பட்டு மனதை உருக்கும் வரலாறு கொண்டது…!
G
Gayathri
14th Jun, 2020

Shareகாஞ்சி பட்டு மனதை உருக்கும் வரலாறு கொண்டது…!

பட்டுப் புடவைகள் இந்தியாவில் மிகப் பிரசித்தம். அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் பனாரஸ் பட்டு , காஞ்சி பட்டு , மைசூர் சில்க் பிறகு காரைக்கால் பட்டு கூட ஒரு சில ஆண்டு முன்பு வரை மிகவும் பிரசித்திப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது அதெல்லாம் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது. இன்றைக்கு கிடைக்கும் பட்டு பனாரஸ் பட்டு, காஞ்சிப்பட்டு மட்டுமே.

பட்டு என்பது ஹிந்து மத சாஸ்திரத்தில் பிறக்கும்போதும் இறக்கும்போதும் அந்த பட்டு வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமில்லாமல் ஹிந்துக்களின் பண்டிகைகளில் பட்டு வஸ்திரங்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது உதாரணமாக கல்யாணத்திற்கு பட்டு வேஷ்டி, பட்டுப்புடவை கட்டியபடி தான் தம்பதிகள் காட்சி அளிப்பார்கள்.

இப்படிப்பட்ட பாரம்பரியமான பட்டு மிக எளிதாக நமக்கு கிடைத்துவிடுகிறது. கடைகளில் போய் நாம் விரும்பிய தங்க ஜரிகை, வெள்ளி ஜரிகை முதற்கொண்டு நாம் விலை கொடுத்து வாங்கி வருகிறோம்.

பட்டு ஜரிகை பொருத்தவரை அதன் விலையும் அதிகம். ஒரு தரமான பட்டுப்புடவை இடை அதிகம் கொண்டதாக பார்கவே நன்றாக இருக்கும்.

அத்தகைய புடவைகளின் விலை 15 ஆயிரத்திற்கு குறைச்சலாக கிடைக்கவே கிடைக்காது.

2000 ரூபாய்க்கு பட்டுப்புடவை கிடைக்கிறது அல்லவா அதில் பெயருக்கு பட்டுநூல் சேர்த்திருப்பார்கள் உடைந்து அது கிட்டத்தட்ட ஒரு காட்டன் புடவை போல் தான் என்று கூறுகிறார்கள் இந்தப் பட்டு தொழில் வித்தகர்கள்.

நல்ல பட்டு புடவை என்பது, பென்ஸ் கார் போல வாங்கி வைத்துக் கொள்வது தான் என்றாலும் அதற்கான பயன்படுத்தும் செலவு மிகமிக அதிகம் அதை டிரைவர் கொடுக்க வேண்டும் , சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் இல்லையேல் தனித்தனியாக வந்து விடும்.


காஞ்சி பட்டு மனதை உருக்கும் வரலாறு கொண்டது…!


புடவை என்பது ஒரு அருமையான பாரம்பரியமான ஆடை அதிலும் பட்டுப்புடவை என்பது கௌரவம் சார்ந்த விஷயம். பட்டுப்புடவையை தயாரிப்பதற்கு இந்த நெசவாளிகள் பட்ட கஷ்டத்தை காஞ்சிபுரம் என்ற ஒரு அருமையான காவியம் வெளிக்கொணர்ந்தது. பிரகாஷ்ராஜ் நடித்த அந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கினார். அதில் நடிகர் விமல் கூட ஒரு சிறிய பாத்திரம் ஏற்று செய்திருந்தார். ஒரு சாதாரணமான நெசவாளி ஒரு பட்டுப்புடவையை வாங்குவதற்கு படும் கஷ்டம் தான் அந்த படம் முழுவதும்.

உண்மையாகவே காஞ்சிபுரத்தில் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் நிலைமை இருந்தது. பட்டுப் புடவைகளுக்கு கிராக்கி அதிகமாக இருக்கும்போது அவர்களை வருத்தி வேலை வாங்கினார்கள். ஆனால் அதற்கேற்ற கூலி கொடுப்பது இல்லை சேர்த்து கொடுக்கிறேன் சேர்த்துக் கொடுக்கிறேன் என்று ஏமாற்றி முதலாளிகள் கொள்ளை லாபம் பார்த்து வந்தார்கள். அதன் பிறகுதான் கூட்டுறவு சங்கங்கள் ஓரளவிற்கு அவர்களின் துயரைத் தீர்த்தது. இல்லை என்றால் அவர்கள் நெசவு செய்ததற்கு கை கால் வலி மட்டுமே மிச்சமாக இருக்கும்.

பட்டு வியாபாரத்தை வைத்துதான் காஞ்சிபுரம் போனால் காலாட்டி சம்பாதிக்கலாம் என்று கூறுவார்கள். ஆமாம் ஒரு பட்டுப்புடவையை நெய்ய கால்களால் தான் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். காலும் கையும் சேர்ந்து வேலை செய்தால் மட்டுமே தறியில் பட்டு புடவை செய்ய முடியும்.

இந்த நெசவாளர்களின் வாழ்வு ஒத்த ஒரு நாடகம் கலர்ஸ் தமிழில் “தறி” என்னும் பெயரிலேயே வெளியானது. இந்த காஞ்சிபுரம் படமும், நாடகமும் தவிர்த்து அவர்களின் கஷ்டத்தை யாரும் விலாவரியாக கூறிவிடவில்லை.

பட்டு என்னதான் பாரம்பரியமான ஆடையாக இருந்தாலும் அதை தொழிலாக கொண்டு முழு மூச்சாக, கலை நயத்துடனும் செய்பவர்களுக்கு என்று சிறந்த மரியாதை கிடைக்கிறதா என்றால் இல்லை. இன்னொரு புறம் கைத்தறியை ஒழித்துக் கட்டிவிட்டு முழுவதும் இயந்திரமயமாக்கல் ஆகிவிட்டது என்னதான் எந்திரத்தில் டிசைன்கள் செய்து முடித்துக் கொண்டாலும் அவர்கள் கையினால் செய்யும் டிசைன்கள் போல வருமா என்றால் நிச்சயம் வராது என்றுதான் கூறுகிறார்கள் கைத்தறி நிபுணர்கள்.

காஞ்சிபுரம் பட்டு சேலை என்ற பெயரில் பல போலிகள் உருவாக்கி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாநகரில் கூட பல புடவைக் கடைகளில் பட்டு என்று கூறி கலப்படத்தை விற்றுவிடுகிறார்கள். இதனாலேயே மக்கள் இன்று பட்டுப் புடவை வாங்கவே அஞ்சுகிறார்கள்.


9 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad