Bluepad | Bluepad
Bluepad
உலக வர்த்தக மையத்தின் குழுவில் இந்தியாவுக்கு கிடைத்த சில சிறு வெற்றிகள்.
A
Arvind Kumar
13th Jun, 2020

Shareஉலக வர்த்தக மையத்தின் குழுவில் இந்தியாவுக்கு கிடைத்த சில சிறு வெற்றிகள்.

நமது நாடு ஏழை நாடு என்று அனைவராலும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் நமது அடிப்படைத் தொழில் விவசாயம் தான் ஆனால் அந்த நிலை 2000 மாம் ஆண்டுக்கு பிறகு நன்றாகவே மாறி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம், அதிக வெளிநாட்டு வேலை போன்றவற்றில் இந்தியர்கள் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறார்கள். அதுபோல பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து தொழில்புரிய தொடங்கினார்கள் உதாரணமாக காக்னிசன்ட், போலாரிஸ், ஹோட்டல் நிறுவனங்கள் இந்தியாவை விரும்பியதின் காரணம் நமக்கு அவர்கள் கொடுக்கும் சம்பளம் மிகக் கம்மி தான். ஆனால் நம்மவர்களின் வேலையில் சுறுசுறுப்பு அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. எனவே நம்மை வைத்து அவர்கள் நிறைய சம்பாதித்தார்கள். நமக்கும் சம்பளத்தை அள்ளிக் கொடுக்கத் துவங்கினார்கள்.

இந்தியர்கள் மட்டும் அப்படி வளரவில்லை அதாவது இந்திய தேசமே ஒட்டுமொத்தமாக வளரத் துவங்கி இருக்கிறது. தற்போது இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல்களை களைய முன்னைப்போல் இல்லாமல் இப்போது சற்று துணிச்சல் ஆகவே எதிர்த்துப் போராடத் துவங்கி விட்டது.

முன்பெல்லாம் நமது நாடு எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்து செல்லாது. அப்படியே சென்றாலும் மேலை நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடும் அது நமது குற்றம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் நமது நாடு என்பது இப்போதுதான் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது...

தடாலடியாக மேலை நாடுகளை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கு நமக்கு சற்று துணிச்சல் தேவைப்படும். அதே நேரத்தில் அவர்களின் தயவு இல்லாமல் தனித்து நிற்கவும் நம்மால் முடிய வேண்டும். இப்படியான நிலைமையில் தான் நம் பக்கம் நியாயம் இருந்தால் மோதி பார்க்க முடியும். அப்படி ஒரு நிலைமை இப்போது இந்தியாவிற்கு கைகூடி விட்டதாகவே தோன்றுகிறது.

எதைப்பற்றியும் அச்சப்படாமல் இந்தியா, சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை உலக வர்த்தக மையக் குழுவில் எதிர்த்து போராடி சிறுசிறு வெற்றிகளை பெற்று வருகிறது.

இந்த வெற்றிகளால் உலக வர்த்தக மையத்தில் இந்தியாவின் குரலும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருக்கிறது. அதுபோல நமது சட்ட வல்லுனர்களின் திறமையும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட்டுள்ளது. எப்போதுமே நமது நாட்டில் கணித வல்லுனர்களும், சட்ட வல்லுநர்களும் இங்கே அதிகம்தான்., இன்னும் பல பேர்களை உருவாக்க வேண்டும் என்பதே பலரின் லட்சியம்.

உலக வர்த்தக மையம் என்பது ஜெனிவா நகரில் இருக்கிறது. அங்கு தான் உலக நாடுகளிலுள்ள அனைவரும் வர்த்தகம் குறித்த உடன்படிக்கைகளை கையெழுத்திடுவார்கள். அதாவது இந்த நாட்டு பொருளை மற்ற நாட்டுக்கு விற்கவோ அல்லது அயல்நாட்டில் பொருளை இந்தியாவில் விற்கவோ ஒருசில உடன்படிக்கைகள் அங்கு தயாராகும்.

அப்படி தான் இந்த WTO ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா உள்ளிட்ட பல நாடுகள் புகார் தெரிவித்துள்ளது. அவர்கள் அளித்த புகார்களினல் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால் இந்தியா சிம் கார்டுகளில் அதாவது மொபைல் சிம் கார்டு கட்டணங்களை அதிகமாக வசூலிக்கிறது. இது நமது ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறி இருக்கிறார்கள்.

இந்தியாவோ இந்த கட்டண விபரம் எல்லாம் நமது ஒப்பந்தத்தில் வரவே இல்லை எனவே நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இது இந்தியாவிற்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றியாக இருந்தாலும் கூட உலக மக்கள் மத்தியில் இந்தியர்களும் நிமிர்ந்து நிற்பது நமது பொருளாதாரத்தை புயல் வேகத்தில் வளர்ப்பதற்கான ஒரு அறிகுறியாக தெரிகிறது.

இதுபோல தான் கடந்த 2016 ஆம் ஆண்டும் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிராக அதே மையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தது. அதாவது சூரிய எரிசக்தி சம்பந்தமான புகாரில் இந்தியாவுக்கு வெற்றி தான் கிடைத்தது.

30 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad