Bluepadஐ. ஏ.எஸ் பணிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?
Bluepad

ஐ. ஏ.எஸ் பணிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?

A
Ananth A.
13th Jun, 2020

Share



ஏதாவது நாம் சற்று சட்டம் சம்பந்தமாகவோ அல்லது அறிவியல் சம்பந்தமாக பேசி விட்டாள் " நீ என்ன பெரிய கலெக்டரா என்று கேள்வி கேட்டு விடுவார்கள் ? " .

உண்மையில் கலெக்டர் பதவி என்பது மிக மிக முக்கியமான பதவிதான்.

கலெக்டர் பதவி பொருத்தவரை, நாம் சினிமாக்களை பார்த்து, கொண்டு வரும் மனுவை வாங்கி வைப்பது , இக்கட்டான சூழ்நிலையில் 144 தடை உத்தரவை அறிவிப்பது , அல்லது மழை பெய்யும் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை இதற்கு நேர் மாறாக இருக்கிறது.

இந்திய குடிமைப் பணி என்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது நம் இந்திய அரசாங்கத்தில் இந்த பணியை நேரடியாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களும் வகிக்கிறார்கள். அதே நேரத்தில் அரசாங்க பணியில் சேர்ந்து படிப்படியாக புரமோஷன் மூலமும் இந்த பணியை வகிக்கிறார்கள்.

இந்திய ஆட்சி துறையைப் பொருத்தவரை வருவாய், காவல்துறை , வனசரகம் போன்ற விஷயங்களைக் கூட இந்த ஆட்சியர் தான் முடிவெடுக்க வேண்டும்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அந்த மாவட்டத்தில் ரியல் ஹீரோ கலெக்டர் ஆகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடக்கிறதா என்று கேள்வி கேட்டால் அதற்கு சரியான பதில் கிடைக்காது. ஏனென்றால் எந்தப் பதவியிலும் எக்கச்சக்க அரசியல் தலையீடுகள் இருக்கத்தான் செய்கிறது. என்னதான் படித்துவிட்டு கலெக்டராக வந்தாலும் அரசியல்வாதிகளின் பேச்சை ஒரு கட்டத்திற்கு மேல் மீறாமல் இருக்க முடிவதில்லை.

ஆனால் ஒரு அதிகாரி நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவரை தடுக்கவே முடியாது. அவருக்கு அந்த அளவுக்கு முழு அதிகாரம் நமது சட்டத்தில் இருக்கிறது.

அதாவது ஒரு ரோடு போடுவது முதல் மரம் நடுவது வரை அந்த விஷயங்களில் அரசாங்கத்தின் தவறுகளை கூட ஆட்சியரால் சுட்டிக்காட்ட முடியும்.

ஆட்சியின் அதிகாரம் என்பது மிக வித்தியாசமானது. ஒரு மாவட்டத்தின் நலனை கருதி ஆட்சியர்களுக்கு பல்வேறு இக்கட்டான முடிவை எடுக்கும் சட்டமும் இருக்கிறது. அதே நேரத்தில் காவல் துறை சார்ந்த கிரிமினல் வழக்குகளும் ஒரு சில குறிப்பிட்ட முடிவை ஆட்சியரிடம் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் முடிவை ஒட்டி அந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வழிவகை செய்து இருக்கிறார்கள்.

இங்கே நாம் பட்டியலிடுவது ஆட்சியர் பதவியின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் தான். இதற்கு தான் இந்த ஐ. ஏ.எஸ் தேர்வு என்பது மிகக் கடினமாக இருக்கிறது.

அதுவும் முதல்நிலை, இடைநிலை, கடைநிலை எந்த நிலையில் தவறினாலும் மீண்டும் முதலிலிருந்து பயிற்சி பெற்று தான் வர வேண்டிய நிலைக்கு இருக்கிறார்கள். ஏன் இப்படி இந்த தேர்வு இருக்கிறதென்றால், தேர்வைபோலவே ஆட்சியரின் வேலையுமே மிக கடினமானது தான்.

ஆட்சியர் ஆவது என்பதும் அவ்வளவு எளிதல்ல அதன் பயிற்சி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. தனி ஒருவன் படம் பார்ப்பவர்களுக்கு புரியும் காலை 6 முதல் 7 வரை குதிரை பயணமும் , அதன் பின்னால் தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் வகுப்பறையும், பிறகு மக்களோடு மக்களாக பழக விடுவார்கள்.

இந்த பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டு விட்டு நேரடியாக பதவியில் உட்கார வைத்து விடமாட்டார்கள். சிறிது காலம் பல்வேறு அரசாங்க அலுவலகங்களில் என்ன நடக்கிறது என்று உன்னிப்பாக கவனிக்க வைப்பார்கள். குறிப்பாக அவர் எந்த ஊரில் பணி செய்யப் போகிறார்களோ அந்த மக்களின் பாஷையை ஓரளவிற்கு அவர்களே முயற்சி எடுத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எத்தனை ஆண்டு பணி செய்திருந்தாலும் டேபுடேஷன் என்று சொல்லப்படும் தற்காலிக பணி மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஒரு ஆசிரியர் என்பவர் மொழி மதம் மாநிலம் போன்ற எந்தப் பற்றும் வைத்திருக்கக்கூடாது. எங்கு சென்றாலும் அவர்களுக்கு ஏற்றதை செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அவர் வேலை.

15 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad