Bluepadஸ்டாக்கிங் காட்சிகள் தமிழ் சினிமாவின் பாரம்பரியமா என்ன?
Bluepad

ஸ்டாக்கிங் காட்சிகள் தமிழ் சினிமாவின் பாரம்பரியமா என்ன?

S
Senthil Rajan
13th Jun, 2020

Share
சில நாட்களாக இணையதளத்தில் இஸ்டால்கிங் ( stalking ) எனப்படுவது மிகப்பெரிய ஒரு குற்றச் செயலாக கருதப்பட்டு வருகிறது.

இது தற்போது நமக்கு ஏற்பட்டு இருக்கும் அமெரிக்க கலாச்சார தொடர்பு. அவர்களின் நூல்களை படிப்பது அவர்களின் புத்தகங்களை வாசிப்பதால் நாம் கற்றுக் கொண்ட இன்னொரு புது வார்த்தை டியூடு ( Dude ) போல இப்போது ஒரு வார்த்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஸ்டால்கிங் என்பது பின்தொடர்தல் என்று அர்த்தம் ஆகும் அதாவது ஒருத்தரை கோபத்துடன் பின்தொடர்வது அல்லது ஒரு பெண்ணை பின்தொடர்வது போன்றவற்றை குறிக்கும் ஒரு வார்த்தை.

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இந்த பின் தொடரும் பழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது ஏன் நாம் ஆகா ஓகோ என்று பாராட்டி கொண்டிருக்கும் மௌனராகம் முதல் பாய்ஸ் , ரெமோ போன்ற படங்கள் வரை எந்த படத்தை எடுத்துக் கொண்டாலும் கதாநாயகன் கதாநாயகியை பின் தொடர்வார். அவர் முதல் சந்திப்பிலேயே உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று நேரடியாகவே கூறுவார் இருந்தாலும் கதாநாயகன் அவரை விட மாட்டார்.

அவர் வீட்டைத் தேடி சென்று பாவமாக நிற்பது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது... இப்படி பலவித பாவங்களை காட்டி கதாநாயகியை சிக்க வைத்துவிடுவார்.

இந்த காட்சி அமைப்புகள் காலம் காலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறை சிறுவர்கள் இந்த காட்சியை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு நிஜவாழ்க்கையில் அதுபோல செய்ய முற்படும்போது தான் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

அவர்கள் பல சிக்கலை சந்தித்தது மட்டுமல்லாமல் அத்தகைய செயல்களால் பெற்றோர்களுக்கும் கடுமையான மன உளைச்சலுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

இது என்னமோ நாம் இன்று நேற்று பார்ப்பது போல சிலர் சமூக வலைத்தளத்தில் போட்டு வருகிறார்கள் நாம் என்பதுகளில் எடுத்துக்கொண்டால் எண்பதுகள் முதல் 2020 வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இது போன்ற காட்சி அமைப்புகள் இல்லாத படமே இல்லை என்று கூறலாம்.

இந்த காட்சிகளை விட்டு வைத்தால் என்ன கேடு? என்று தான் புரியவில்லை எல்லா படங்களும் ஒரே அடியாக குறை கூறி விட முடியாது ஆனால் அவர்களும் என்னதான் செய்யமுடியும் எல்லா கதைகளும் படமாக எடுத்து விட்டார்கள்... புராணம் தொடங்கி புதிய கற்பனை வரை எல்லாவிதமான கதைகளும் தீர்ந்து போய்விட்டது...!

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை காதல் சினிமாக்களுக்கு மட்டுமே தான் ஓரளவிற்காவது மவுசு இருக்கிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் தரமான படத்தை எடுத்து விட்டால் நீங்கள் திருப்தி அடைந்து கொள்ளலாம். தயாரிப்பாளரை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது தமிழ் சினிமாவில் இத்தகைய காட்சிகள் எப்போது குறைய வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் மன நிலை மாறாதவரை நாங்கள் அவர்கள் நினைக்கத் தகுந்தது போல் தான் படம் எடுக்க முடியும் என்று கூறுகிறார்கள் சினிமா துறை சார்ந்த வல்லுனர்கள்.

சினிமா பார்ப்பதால் மக்கள் கெட்டுப் போகிறார் என்று கூறுவதெல்லாம் பெரிய கட்டுக்கதைதான். ஏனென்றால் சினிமாவில் எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்கிறார்கள் உடனே அதை அப்படியே கேட்டா விடுகிறோம். ?

அந்நியன் படத்தில் கூறுவது போல கேட்டு எல்லாரும் என்ன ஒரே நாளில் மாறி விட்டார்களா என்ன என்று கேட்கவும் தான் செய்கிறார்கள் சினிமா சார்பாளர்கள்.

ஆனால் சினிமாவில் வரும் காதல் காட்சிகலால் தான் பள்ளிக்கூடங்கள் முதல் பல பிரச்சனைகள் வருகிறது.

இன்று தமிழ் சினிமாவில் நாயகர்கள் தகாத வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்களோ அன்று முதல் பள்ளி மாணவர்கள் காது கூசும் வார்த்தைகளை பேச துவங்கி விட்டார்கள் என்று கூறுகிறார்கள் சமூக அக்கறை சார்ந்தவர்கள்.

எது எப்படியோ எதையுமே ஒரு அளவிற்கு மேல் நாம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கமுடியாது அப்படித்தான் சினிமாவும் அதை பார்த்த தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையில்லாதது அங்கேயே விட்டு விடவேண்டும் தான். சினிமா என்பது மிகவும் சினிமாத்தனமானது தான்., அதில் காட்டும் எந்த ஒன்றும் வாழ்வில் நடைமுறைக்கு அவ்வளவு எளிதில் ஒத்துவராது. அதை நாம் புரிந்து கொள்ளாத வரை யாரையும் குறை கூறி எந்த பிரயோஜனமும் இல்லை. அதே நேரத்தில் அந்த சினிமா எடுப்பவர்கள் அவர்களுக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்குமே நல்லதுதான்.


19 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad