Bluepadவந்துவிட்டது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டட் !!
Bluepad

வந்துவிட்டது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டட் !!

A
Ananth A.
12th Jun, 2020

Share



நாம் நெடுநாட்களாக ஆண்ட்ராய்ட் எனப்படும் கூகுள் கம்பெனியின் மொபைல் போன்கள் சாப்ட்வேரை தான் பயன்படுத்தி வருகிறோம்.

ஆண்ட்ராய்ட் சாஃப்ட்வேர்கள் தான் அதிக அளவில் விற்று தள்ளுகிறது. ஆண்ட்ராய்டு தவிர ஐ ஓ எஸ் எனப்படும் சாப்ட்வேர் என்னும் மென்பொருளை ஆப்பிள் நிறுவனம் , நோக்கியா மற்றும் சில கம்பெனிகள் சொந்தமாக தனக்கான சாப்ட்வேர்களை வைத்திருக்கிறது.

ஆனால் அனைத்துமே ஆண்ட்ராய்ட் இடம் போட்டி போட்டு தோல்வி அடைகிறது. ஐ.ஓ.எஸ் தனி ரகம்தான் அது விரும்புபவர்கள் தான் அதை பயன்படுத்த முடியும்.

ஆனால் ஆண்ட்ராய்ட் அப்படியல்ல யார் வேணாலும் பயன்படுத்த முடியும் மொபைல் போன்கள் இத்தனை எளிதாக பயன்படுத்துவதற்கு அந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே காரணம்.

இதுவரை நாம் ஆண்ட்ராய்டு 10 என்ற வெர்ஷன் பயன்படுத்தி வந்தோம்.

சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விட்டது இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறதென்றால்...

பாதுகாப்பு அம்சங்கள் :

ஆண்ட்ராய்டு பத்தில் கூட பல பாதுகாப்பு அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது இப்போது அடுத்த கட்டமாக 11 லும் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எளிதில் யாரும் நமது மொபைலில் இருக்கும் விஷயங்களை திருட முடியாத அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் செய்துள்ளது.

விரல்ரேகை, ஃபேஸ் லாக் தவிர மற்ற சில பயன்பாடுகளையும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்ட்ராய்ட் பதினோராவது வெர்ஷன் வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் இதுவரை வந்த வெர்ஷன்களில் அதிகமாக தொல்லை கொடுத்தது லாலிபாப் வெர்ஷன் தான் என்று கூறப்படுகிறது.

அதுதான் அந்த மொபைலை அப்படியே நிற்க வைத்ததாக கூறினார்கள்.

அதன் பிறகு எதிலுமே இத்தகைய சிக்கல் ஏற்பட வில்லை. மேலும் இப்போது பாதுகாப்பு அம்சத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்பது இது பரவலாக வரும்போதுதான் தெரியும்

நோட்டிபிகேஷன்களை நிர்வகிக்க முடியும் :

இன்றைக்கு மொபைல் போனில் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் டிஸ்டர்ப் நோட்டிபிகேஷன் தான் நமது மொபைல் திரையில் ஓயாமல் செய்திகள் வந்து கொண்டே இருப்பது ஒரு பெரிய சிக்கல்.

ஏனென்றால் எந்த செய்தி நமக்கு பிடித்தமாக வருகிறது எந்த செய்தி விளம்பரத்திற்காக வருகிறது என்று நாம் தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் இந்த புதிய ஆண்ட்ராய்டு பதினொன்றாம் வெர்ஷனிலில் அதற்கென பிரத்யேகமாக ஒரு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

நமக்கு வரும் செய்திகளை குறுஞ்செய்திகளை மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நாம் தனியாக கவனித்துக் கொள்ள முடியும்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் பாட்டு கேட்கலாம்:

இந்த ஆண்ட்ராய்ட் 11 இல் புதிதாக நமது விருப்பப்படி பாடல் கேட்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது முன்பெல்லாம் நாம் பாடலை நிறுத்த வேண்டும் என்றால் மீண்டும் நாம் எந்த ஆப்பிள் பாடலை கேட்கிறோமா அங்கு செல்ல வேண்டி இருக்கும். இப்போது அப்படி அல்ல மெயின் திரையிலேயே மெலிதாக பாடல்களின் திரை வரும் அதில் நாம் பாடலை மாற்றியோ அல்லது அனைத்து கொள்ளலாம்.

ஏன் மேலும் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை இப்போதைக்கு pre-release செய்யப்பட்ட சாப்ட்வேர் தான் கிடைக்கும். இதனை நமது சொந்த ரிஸ்கில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...

இத்தனை நாள் பொறுத்து விட்டோம் இன்னும் இரண்டு மாதங்கள் பொறுப்போம் மொபைலில் அந்த வெர்ஷன் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது...காத்திருப்போம்.

இத்தனை புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஆண்ட்ராய்ட் விரும்புவர்கள் கூறுவது என்னவென்றால் நாங்கள் இன்னும் என்னென்னவோ எதிர்பார்த்தோம் கேமராவிற்கு சில வசதிகள் இருக்கும் என்று நினைத்தோம் .அதுமட்டுமல்லாமல், இந்த கான்பரன்ஸ் கால் வசதிகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஏதோ மாற்றி இருக்கிறேன் பேர்வழி என்று எதையோ செய்திருக்கிறார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

29 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad