Bluepadசர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் - ஜூன் 12ஆம் தேதி!
Bluepad

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் - ஜூன் 12ஆம் தேதி!

S
Shankar
12th Jun, 2020

Share"குழந்தைத் தொழிலாளர்களின் சம்பளம் பெற்றோர்களுக்கு அவமானம்" என்று காலம் காலமாக அரசாங்கம் விளம்பரப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது ஆனால் , அந்த விளம்பரங்கள் சென்று சேருபவர்களுக்கு சரியாக சென்றதா என்றால் அது ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியே!

குழந்தை தொழிலாளர்களை எதிர்ப்பது ஏன் ?

குழந்தை தொழிலாளர்களை எதிர்ப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது ஒன்று அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது இரண்டாவது தொழிலாளர்களின் பாதுகாப்பை கருதியே.

இன்று கல்வி இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது ஏனென்றால் சாதாரண கடைநிலை ஊழியர்கள் கூட கம்ப்யூட்டர் வைத்து தான் இப்போது வேலை பார்க்க வேண்டிய நிலைமை. ஓரளவிற்காவது எழுதப்படிக்க தெரியாதவர்கள் எங்குமே வேலைக்கு செல்ல முடியாது அல்லது ஒரு தரமான ஒரு வேலையை பார்க்க முடியாது.

அனைவருக்கும் கல்வி திட்டம் என்று கூறி தான் அரசாங்கம் அரசு பள்ளியை திறந்து வைத்து இலவசமாக கல்வி வழங்குகிறேன் என்று கூறுகிறது ஆனால் அந்தக் கல்வியைக்கூட படிக்க முடியாத பல குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...

தொழிலாளர்கள் உருவாவதற்கு காரணம் முக்கால்வாசி பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள் அதாவது பெற்றோர்களை இழந்தவர்கள் குழந்தைகளை எடுத்து வளர்ப்பவர்கள் அவர்களை கொடுமைப்படுத்தி வேலைக்கு அனுப்பி அந்த வருமானத்தை அவர்களே பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு அறிக்கை.

ஒரு புறம் சொந்த பெற்றோர்களே குழந்தைகளை படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள் அதற்கு குடும்ப வறுமையையும் ஒரு காரணமாக காட்டிக்கொள்கிறார்கள்.

அல்லது பெற்றோர்களில் ஒருவர் பொறுப்பற்றவராக இருந்து பிள்ளைகளின் எதிர்காலத்தை இப்படி பால் செய்கிறார்கள் உதாரணமாக தகப்பன் குடிகாரராக இருந்தோ அல்லது தாயார் ஊதாரியாக செலவு செய்பவராக இருந்தோ பிள்ளைகளை இந்த நிலைக்கு ஆளாக்கி விடுகிறார்கள்.

கல்விதான் இந்தத் தலைமுறையினருக்கு மிக மிக முக்கியம் அதுவும் குறைந்தது அடிப்படை கல்வி கற்காத குழந்தைகள் தொழிலாலியாக இருந்து சம்பளத்தின் வாசனையை பார்த்து விட்டால் அவர்களுக்கு காசு தான் பிரதானம் ஆகிவிடும் படிப்பு என்றுமே இரண்டாம் பட்சமாக மாறிவிடும். ஆனால் காலம் கடந்தபின் ஒழுங்காக படிக்கவில்லை என்று வருந்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் இதன் காரணமாக தான் குழந்தை தொழிலாளர் முறையை எல்லோருமே எதிர்க்கிறார்கள்.

குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதியதால் மற்றொரு சாரர் எதிர்க்கிறார்கள் முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர் ஒருவர் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அந்த காலத்தில் வெறும் சுரங்கத் தொழிலாளிகள் மட்டுமே உண்டு சுரங்கத்தை தோண்டி நிலக்கரி எடுப்பது அல்லது தங்கம் வெள்ளி சுரங்கம் போன்ற வேலைகள் தான் அதிகமாக இருந்தது அப்போது அந்த சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் நிறைய பேர் காயம் பட்டுக் கொண்டே இருந்தார்கள் உடனடியாக ஒரு கணக்கு எடுத்தால் அந்த காயம் படும் இவர்களில் யார் யார் எந்தெந்த வயதில் இருக்கிறார்கள் என்பதை பற்றிய கணக்கெடுப்பு அது .

அப்படி பார்க்கும்போது தான் 13 லிருந்து 16 வயதுடைய சிறுவர்கள் தான் பெரும் காயம் பட்டுக் கொண்டு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு இந்த வயது இருக்கும் குழந்தைகளுக்கு வேலையில் வீரியம் புரியவில்லை அதே நேரத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாக வேலை செய்கிறார்கள் என்கின்ற உண்மை புரிந்தது. அதன் பின்னர்தான் குழந்தை தொழிலாளர்களுக்கு என்று ஒரு சட்டமே உருவாக்கப்பட்டது வேலைக்கு வரும் அடிப்படை வயது 18 என்று கூறுகிறோமே அந்த சட்டமே உருவாக அந்த வெள்ளைக்காரர் எடுத்த கணக்கெடுப்பும் ஒரு காரணமாக இருந்தது.

சட்டம் தான் வந்து விட்டது எனவே குழந்தை தொழிலாளர்கள் முறை இந்தியா முழுவதும் ஒழிந்து விட்டது என்று நினைத்தால் நாம் தான் முட்டாள்கள்.

இப்போது இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குண்டு குண்டாக தமது சொந்த ஊருக்குத் திரும்பினார்கள் அல்லவா, அப்படி திரும்பி சென்றவர்களில் முக்காவாசி 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் தானாம்.

21 

Share


S
Written by
Shankar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad