Bluepadமகாபாரதம் படிப்பவர்கள் மனதை கொள்ளைகொள்ளும் கதாபாத்திரம் - கர்ணன்.
Bluepad

மகாபாரதம் படிப்பவர்கள் மனதை கொள்ளைகொள்ளும் கதாபாத்திரம் - கர்ணன்.

A
Arvind Kumar
11th Jun, 2020

Shareநமது நாடு ஆன்மிகத்தில் திளைத்த நாடு அதிலும் நமது நாட்டின் காப்பியங்களான ராமாயணம், மகாபாரதம் முழுக்க முழுக்க தெய்வ சிந்தனைகள் நிறைந்தவையே..

அதிலும் மகாபாரதத்தில் வரும் பகவத் கீதை தான் இந்துக்களின் புனித நூலாக இருக்கிறது. மகாபாரதத்திற்கு மிஞ்சிய காப்பியங்களே கிடையாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதிகமான கற்பனை வளமும் வார்த்தை ஜாலங்களும் நிறைந்தது. அதற்கு மிஞ்சிய கற்பனையே இல்லை என்றும் கூறுவார்கள்.

அப்படியே மகாபாரதத்தில் இருக்கும் பஞ்சபாண்டவர்கள் , துரியோதனன், துச்சாதனன், குந்தி , பாஞ்சாலி, ஸ்ரீ பகவான் கிருஷ்ணன் ஆகிய அனைவருமே மிகச் சிறந்த கதாபாத்திரமாக இருந்தாலும்...

பலராலும் நேசிக்கப்படுபவர் "கர்ணன்" தான். அன்றும் , இன்றும் , என்றும் எளிதில் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு தியாக சுடர் “கர்ணன்” தான். அந்த கர்ணனின் தந்தையான சூரிய பகவான் கூட கர்ணனிடம் புத்திர பாசத்தை காட்ட முடியவில்லை. கவச குண்டலத்துடன் “தேவாதி தேவ” அம்சத்துடன் தோன்றும் அந்த சுடர் , மறையும் போதும் சாமானியானாக , நிகர் அற்ற தியாகியாக, நமது அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டு இன்றளவும் நிலைத்தும் விட்டார் !!

கர்ணனின் குரல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆனது:

கர்ணன், அர்ஜுனனுக்கு நிகரான அனைத்து திறமையும் கொண்டிருந்தாலும் அவர் குலப்பெருமையை குத்தி காட்டியே அவருக்கு சரிசமமாக வாய்ப்பு வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற அடிப்படையில் துரியோதனன் அங்கதேசத்தை வழங்கினாலும் கர்ணனால் அந்த பெரும் பேற்றைப் பெற முடியவில்லை.

கர்ணன் பக்கம் நியாயம் இருந்தாலும் குந்திதேவி அவனை வாய் நிறைய மகனே என்று அழைக்கவே இல்லை. இறுதி கட்டத்தில்தான் அழைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கர்ணன் மீது எந்த தவறும் இல்லை. குந்தி செய்த ஒரு விளையாட்டுத்தனமான விஷயத்தால் தான் கர்ணனின் பிறப்பு ஒரு பெரிய சிக்கலாகிவிட்டது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று முதலில் கூறியதே கர்ணனை வைத்துதான் தெரியுமா?

( கௌரவர்கள் 100 பேர் ) " 100 பேருடனும் இருந்தாலும் சாகத்தான் போகிறேன், பாண்டவர்களுடன் நான் ( கர்ணன் ) சேர்ந்தால் ஆறாக மாறுவோம் அப்படி இருந்தாலும் நான் சாகத்தான் போகிறேன் அம்மா... நான் துரியோதனனுக்கு செஞ்சோற்று கடன் பட்டுள்ளேன். எனவே நான் அவன் பக்கமே இருந்து மரணத்தை அடைகிறேன் " என்று குந்தியிடம் கர்ணன் கூறுவதாக வில்லிபாரதத்தில் ( அதன் விளக்கத்தில் ) வரிகள் இடம் பெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் பரசுராமரிடம் வித்தைகளை கற்ற கர்ணன் அவரிடம் பெற்ற சாபத்தால் கர்ணன் கற்ற வித்தைகள் தேவைப்படும் நேரத்தில் உதவாமல் போகிறது.

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஈடுபட்டதற்காக இறுதிக்கட்டத்தில் கர்ணனிடம் வந்து யாசகம் கேட்கிறார்...

அப்படி யாசகம் கேட்டு தான் கர்ணனின் உயிரை அர்ஜுனனால் எடுக்க முடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் கர்ணனின் பாத்திர வலிமையை.

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று கூறி தான் கர்ணனின் உயிரை பெற முயற்சி செய்கிறார் பகவான் கிருஷ்ணர். ( உங்களுக்கு சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த கர்ணன் படம் மனத்திரையில் தோன்றலாம் ) .

கர்ணனின் கதாபாத்திரம், ஒடுக்கப்பட்ட அவர்களுக்கான உரிமை குரலாகவே ஒலிக்கிறது. கர்ணனின் தியாகத்தை மகாபாரதம் பெரிய அளவில் போற்றுகிறது. கர்ணன் அர்ஜுனனை விட மிகவும் புகழ் பெற்று இருக்கின்றான் என்று அந்த காப்பியம் குறிப்பிடுகிறது.

குந்திதேவி கேட்டதற்காக ஒரே ஒருமுறை மட்டும் தான் அவன் நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது பிறவிக்கின்றான். இப்படி பலவிதங்களில் கர்ணன் விட்டுக் கொடுத்து இருக்கிறான். கர்ணனுடைய கொடைவள்ளல் குணங்களையே அவன் சத்தமற்ற நாயகனாக மகாபாரதம் முழுவதும் வியாபித்து இருக்கிறான் என்றால் அது மிகையாகாது.

இன்றளவும் கூட யாராவது தானம் செய்தால் "கர்ணன் வள்ளல்" என்று அவரை அடைமொழியாக குறிப்பிடுகிறார்கள் அந்த அளவிற்கு இந்த உலகம் உள்ளவரை கர்ணனின் புகழும் நிலைத்திருக்கும்

29 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad