Bluepadஇந்தியா பல நாடுகளுக்கு சிறந்த நட்பு நாடாக விளங்குகிறது - இது எப்படி சாத்தியமானது?.
Bluepad

இந்தியா பல நாடுகளுக்கு சிறந்த நட்பு நாடாக விளங்குகிறது - இது எப்படி சாத்தியமானது?.

A
Abhishek J.
30th Nov, 2021

Share
இந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது உலகத்தில் மக்கள் தொகை இரண்டாவது பெரிய நாடு அதுமட்டுமல்லாமல் இளைஞர்களை அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடு வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்பதை தான் நாம் இத்தனை நாட்கள் பார்த்து வந்திருக்கிறோம்.

ஆனால் இப்போது இந்தியா உலகில் பல நாடுகளுக்கு சிறந்த நட்பு நாடாக விளங்குகிறது அதற்கு காரணம் இந்தியா மற்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கு உதவுவதோடு , நமது நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவிற்கு கெடாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறது இதன் காரணமாகவே இந்தியா நட்பு நாடுகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் பெருகி விட்டது.

இப்போது இந்தியாவிற்கு நிபந்தனையற்ற உதவிப் புரிய அமெரிக்கா , ஐரோப்பா, ஐக்கிய நாடுகள் , அதுமட்டுமில்லாமல் ரஷ்யா , இஸ்ரேல் போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு உதவ காத்திருக்கிறது.

சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இந்தியாவை சிறந்த அண்டை நாடாக கருதுகிறது. தற்போது அந்த நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே இந்தியாவை தான் அணுகுகின்றன ( பாகிஸ்தான் தவிர்த்து ) .

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெருக்குவதற்காக பல உதவிகள் செய்து வருகிறது. அதேபோல் தற்போது ஏற்பட்ட நெருக்கடிக்கு இந்தியா தகுந்த அளவு உதவி செய்துள்ளது.

இந்தியா சார்க் கூட்டமைப்பின் பலம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. அதை சீர்குலைக்கும் பல சதிகள் அரங்கேறி வருகிறது அது வேறு விஷயம். இந்தியா தற்போது உலக நாடுகள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு காரணம் தற்போது ஏற்பட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை கொள்கையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தான் .
இத்தகைய வளர்ச்சியை நம் நாடு அடைவதற்கு முக்கியமான காரணம் நம்முடைய பண்பாட்டிலிருந்து என்றுமே நாம் நீராக இருப்பது தான். நம் நாடு எந்த நாட்டின் மீதும் காரணம் இன்றி தாக்குதல் நடத்துவது இல்லை. ஆனால் போர் தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வந்தவர்களை சாதாரணமாக விட்டு வைத்ததில்லை.

அதனால் தான் 1962 ஆம் ஆண்டு எந்தவித பயமும் இன்றி போர் தொடுத்த சைனா இன்று இந்தியாவின் கொல்லைப்புறம் வழியாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது. நேருக்கு நேர் மோத எண்ணுவதே இல்லை ஏனென்றால் இந்தியாவின் பலம் அந்த அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

இது போல இந்தியாவும், உதவிகள் தேவைப்படும் சிறுசிறு நாடுகளுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவிகளை வாரி வழங்கி வருகிறது. அதுவும் இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளுக்கு மத்தியில் உயர்வதற்கு ஒரு பெரிய காரணம்.

பதவி ஏற்று விட்டால் மற்ற நாடுகளின் தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேச வேண்டும் என்கின்ற அவசியத்தை இந்தியா கடந்த சில வருடங்களாக கிள்ளி எறிந்து விட்டது. யாரைப் பற்றியும் தவறாக பேசி பொழுதை கழிப்பது இல்லை.

அது மட்டுமல்லாமல் உலக அளவில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. அதிலும் பலம் வாய்ந்த ராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடம் என்றால் நினைத்துப்பாருங்கள் ஆம் இந்தியாவை பொருத்தவரை தரைவழி வான்வழி மற்றும் அதிநவீன ஆயுதங்கள் என்று இந்தியா ஒரு ராணுவ தன்னிறைவு கொண்ட நாடாகவே இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது அது மட்டுமல்லாமல் சுற்றிப்பார்க்கும் ஆன்மீக தலங்கள் இயற்கை தளங்கள் போன்ற பல விஷயங்கள் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ( ஓரளவிற்கு ) ஈர்க்கிறது.

இதை கருத்தில் கொண்டுதான் இனிமேல் ஜி-7 என்று பேசுவதில் பிரயோஜனமில்லை இந்தியாவையும் சேர்த்துக்கொண்டு ஜி-8 என முன்னேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார்.

இந்தியாவும் பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதுவும் எண்ணெய் மட்டும் பெட்ரோலியத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி நன்றாகவே அதிகரித்து வருகிறது. இந்த நிலை இன்னும் இதே நேர்மறையான நோக்கில் சென்று கொண்டே இருந்தால் கலாம் கண்ட கனவு வெகு விரைவில் பளித்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

31 

Share


A
Written by
Abhishek J.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad