Bluepadதமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
Bluepad

தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

G
Gayathri
11th Jun, 2020

Share
ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனித்துவம் உண்டு இந்த நாமக்கல் கவிஞருக்கு “காந்தியக் கவிஞர்” என்கின்ற ஒரு அடைமொழி தரப்பட்டுள்ளது.

இந்த அடைமொழி வெறும் பெயருக்காக வழங்கப் பெறவில்லை "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று காந்தியடிகளைப் பற்றி அவர் எழுதிய பாட்டுகளுக்காக மட்டும் தான் கிடைத்ததா என்றால் அது மட்டுமே காரணமும் இல்லை .

நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் சிற்றூரில் தான் பிறந்தார் அப்போது அது சேலம் மாவட்டம் ஆகத்தான் இருந்திருக்கிறது. அவரின் தந்தையார் காவல்துறை அதிகாரியாக இருந்தார் தாயார் இறைபக்தி மிக்கவராக இருந்தார் தந்தையின் கண்டிப்பும், தேசபக்தியும், தாயாரின் தெய்வ பக்தியும் ஒருங்கிணைந்ததே அவருடைய படைப்புகள் ஆக இருந்தது.

அகிம்சை நெறியை முழுவதும் அறிந்து அதில் உள்ள வீரியத்தை வார்த்தைகளில் வார்த்து எடுத்தார் நாமக்கல் கவிஞர் அதனாலேயே. அவருக்கு அந்த அடைமொழி தரப்பட்டது இத்தனைக்கும் அவர் ஆரம்பத்தில் நேதாஜி ,பாலகங்காதர திலக் , கோபால கிருஷ்ண கோகலே போன்றவர்களின் தீவிர சிந்தனையால் தான் ஈர்க்கப்பட்டவர்.

நாளடைவில் அவர் காந்தியத்தின் அகிம்சையின் சக்தியை நன்றாக உணர்ந்து அதன்பால் முழு கவனத்தையும் செலுத்தினார். எத்தனையோ முறை விடுதலை வேட்கையை தூண்டும் விதமாக பேசியதற்காக சிறைக்கு கூட சென்று திரும்பியிருக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு முறை சிறை சென்று வரும் போதும் அவருடைய பேச்சின் பக்குவம் பண்மடங்காக அதிகரிக்க துவங்கிதான் வந்திருக்கிறது அவருடைய பேச்சுக்களால் பல இளைஞர்கள் தட்டி எழுப்பப்பட்டார்கள்.

முன்னர் குறிப்பிட்டது போல அவர் ஆரம்ப நாட்களில் தீவிரவாதத்தை தான் ( தீவிர விடுதலைப் போராட்டத்தை ) ஆதரித்தார். நேதாஜி வழியில் அடித்து நொறுக்கி தான் சுதந்திரம் வாங்க வேண்டும் என்றுதான் அவர் எண்ணிக் கொண்டிருந்தார்.

நாட்கள் செல்ல செல்ல அவருக்கு அகிம்சையின் சக்தி புரிந்து இருந்தது.

அவர் பல ஆராய்ச்சி நூல்களும் எழுதியிருக்கிறார் கம்பனின் கவிதைகள் , திருக்குறளின் தொகுப்பு , திருக்குறளும் பரிமேலழகரும் போன்ற நூல்களை எழுதி அத்தகைய நூல்களை நம்மிடத்தில் வந்து சேர மிகவும் எளிமை படுத்தி உள்ளார்.

இந்திய இளைஞர்கள் கைத்தொழில் கற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும் என்று அன்றே கூறியவர் அவர். அந்த விஷயத்தை அவர் பெரிதும் நம்பினார்.

"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்று அவர் கூறிய வாசகங்கள் காலம் கடந்தும் இன்றும் பொருந்திக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் "தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு"

" தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "

இப்படி அவர் எழுதிய வசனங்கள், அவர் மேடைப்பேச்சுக்களில் பயன்படுத்திய வார்த்தைகள் இன்றளவும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவரது சிந்தனைகள் மற்றும் சொற்களும் காலத்தால் அழியாது.

அவரின் கவிதைகள் ஒரு சிலது மிகவும் புரிந்துகொள்ள முடியாதபடி இலக்கியத்துடன் அமைந்திருக்கும்., மற்ற சில கவிதைகள் புதிய கவிதைகள் போல எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டிருக்கும் அப்படியும் அவரால் எழுத முடியும் இப்படியும் எழுத முடியும்.

மலைக்கள்ளன் என்று அவர் எழுதிய நாடகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்து சினிமாவாக வெளியானது. எத்தனையோ கவிதைகள் எழுதியவர் அவனும் அவளும், மலைக்கள்ளன், என் கதை போன்ற எண்ணற்ற அமரத்துவம் வாய்ந்த காவியங்களைப் படைத்துள்ளார்.

1970 களின் வாக்கிலேயே இந்த உலகை விட்டு மறைந்தார் , அவரின் புகழ் இன்றளவும் நிலைத்து இருக்கிறது. அவருடைய எழுத்துக்கள் எல்லாம் அரசுடமையாக்கப்பட்ட இருக்கிறது அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்து இருக்கிறது மத்திய அரசு , அவருக்கு தபால் தலையையும் வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டது.

மாநில அரசு அவருக்கு அரசவை கவிஞர் என்கின்ற கௌரவத்தை வழங்கியது பின்னால் அவரை மேல்சபை உறுப்பினராக ஆக்கியது இப்போது கூட இருக்கும் ஒரு அரசாங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அவர் வாழ்ந்த வீடும் அரசுடைமையாக்கப் பட்டுள்ளது, சேலத்தில் அவருக்கு ஒரு அருங்காட்சியம் வைக்கப்பட்டுள்ளது.சேலம் அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய சட்டைகள், அவர் பயன்படுத்திய பேனாக்கள்போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

17 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad