Bluepadமண்ணும் மனிதரும்
Bluepad

மண்ணும் மனிதரும்

K
Kaliyaperumal Veerasamy
10th Jun, 2020

Share

மண்ணும் மனிதரும் சிவராம காரந்த் மொழிபெயர்ப்பாளர் சித்தராமலிங்கையா
மண்ணும் மனிதரும் இது ஒப்பீடு அளவில் முக்கியமான காலத்தோடு ஒத்திசைவுள்ள நாவல் எனவும் சேர்த்துக் கொள்ளலாம் மண் எப்படி வெளியே உள்ளதை , விதைப்பதையும் நீரையும் , உரம் ஆகியவற்றை உள்வாங்கி விதையை வளர்த்து மரம் , செடி , கொடி ஆக்குகிறதோ மனித வாழ்வும் அப்படியே வெளிபடும் விஷயங்களில் மாறுபடுகிறோம் பாடுபட்டு உழைத்தால் பலன் உண்டு. கால ஓட்டத்தில் மண் பலவித சோதனைகளையும் சாதனைகளையும் படைக்கிறதோ , மனிதரும் தனக்கு ஏற்படும் நன்மை தீமைகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளுதல் அல்லது அழித்துக் கொள்ளல் நிகழ்கிறது இந்நாவலை பொறுத்தவரை காந்தீயக் கொள்கையானதற்சார் பை நிலைநாட்டுகிறது எப்படி சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் ஒரு காலகட்டம் வரையில் மனிதன் பொருள் சார்ந்து வாழத் தேவையில்லாமல் இருந்தனர் மகிழ்ச்சியும் மன நிறைவான வாழ்வும் வாழ்ந்தனர் அக்காலகட்டத்த்தில் ஆங்கிலேயரின் வாழ்க்கைப் பாணியை பின்பற்றுவதால் ஏற்பட நன்மை தீமைகளையும் தீவிரமான நகைச்சுவையோடு பதிவு செய்துள்ளார் அக்காலத்திலேயும் விவசாயம் பாதித்து, விவசாயம் செய்ய கூலிக்கு ஆள் கிடைக்காமல் மக்களின் தீண்டாதத்தையும் சுட்டி காட்டுகிறார் சாதீய பாகுபாடுகளான தீண்டத்தகாதவர்களையும் அவர்கள் இச் சமூகத்துக்கு எவ்வாறான பங்களிப்பை கொடுத்துள்ளனர் என்பதை சூரன் அவரின் மகன் , மருமகள் மூலம் ஆணித்தரமாக குறிப்பிட்டு அவர்களின் வாழ்க்கை முறை, எளிமை , கஞ்சி குடிக்க படும் பாடு , (ஒருவேளை உணவுக்கு) இதை இலக்கிய தரத்தோடு விவரிக்கிறார் மேலும் இந்நூலாசிரியருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதை நாவல் முழுவதும் மிக எளிய நிச்சயமான நகைச்சுவையை கதைமாந்தர்கள் வாயிலாக மூன்று தலைமுறைக்கும் ஏற்றவாறு எழுதுவதென்பது ஆச்சர்யமான உண்மை (இது தேவன் கதைகளில் அதிகம் இருக்கும்) நகைச்சுவைகளில் உதாரணம்
சீனன், நாகப்பன் ஆசாரி வீட்டுக்கு கடன் கொடுத்தவர்கள் நடந்ததைவிடவும் அதிகம் நடந்தான் . கூலியை அந்த வருடம் பாதியும் கடவுள் அருள் இருந்தால் அடுத்த வருடம் மீதியும் தருவதாக அவன் ஒப்புக் கொள்ள வேண்டியிருத்தது
நாகம்மா சகித்துக் கொண்டே சீனமய்யரே ஈரத் துணியோடு படுத்துக் கொள்வதற்கு என்ன சாவா உத்திர கிரியையா என்று கேலி செய்தாள்
இவர்கள் யாருமே ஒரே வருசத்தில் ஒரு வகுப்பை கடந்து விட வேண்டும் என்பதை அறிந்தவர்கள் அல்ல ஒருவனை விட மற்றவன் ரசிகன்
ஓட்டு வீடு போட நினைத்தால் எவ்வளவு செலவானாலும் என்றாலும் பலா மரத்தை வெட்ட வேண்டும் என்று சொன்ன அனுமாச்சாரியாரை தவிர வேறு எந்த தச்சனாவது வரலாம்.
நாகு என்னிடம் பாடம் படித்தவர்கள் எல்லாம் கலியாணம் செய்து கொண்டு வயலின் பெட்டியை காந்தி சார்க்காவை போல பரண் ஏற்றி விட்டார்கள்
சென்னா நீ கொண்டு வந்து போட்ட எருவே அவ்வளவு நன்றாக வளர்ந்தது என்றால் உன்னையே வெட்டி எருவாகப் போட்டால் என்னவாகும் என்று நினைக்க தோன்றுகிறது
. நிறைய இடங்களில் நகைச்சுவை கொடி கட்டிUறக்கிறது உண்மையில் அவர் சிறந்த நகைச்சுவையாளர் என்பதை மறுக்க கூடியது அல்ல இந்நாவலில் ஜாதித் துவேசம் ஒரு சில இடங்களில் தலை காட்டுகிறது அதில் ஒன்று திருவிழாவிற்கு போய் விட்டு வரும் ஐதாளர் குடும்பம் கடற்கரையோரம் போகாமல் வேறு வழியில் போக முடிவெடுத்து போகும் போது சத்தியபாமா ஏன் அந்த வழியாக போகாமல் இந்த கடினமான பாதையில் அழைத்து போகிறீர்கள் என்று கேட்கும் போது ஐதாளர் சொல்லும் பதில் அவ்வழி நெடுகிலும் தீண்டத்தகாதவர்கள் போய்க் கொண்டிருப்பர் அதனால் தான் இவ்வழி என பதிலலிப் பார் வீட்டுக்கு தலைவன் ஆண்மகன் தான் என்பதை தன் ஆளுமையாளும் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் தன் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர் அதன் வெளிபாடாக | பூனூல் போட்டுக் கொள்ளும் பையனுக்கு ஆசிர்வாதம் செய்து கொடுப்பதற்கு ஏதாவது கையில் கொண்டு வாருங்கள் என்று சொன்ன பார்வதிக்கு ஐதாளர் சொல்லும் பதில் நான் என்ன முட்டாளா வீட்டில் எந்த முடிவு எடுப்பதாலும் ஆண் மகனே எடுப்பது பெண்னை எது பொருட்டாக அல்லது அவர்கள் பேச்சை கேட்க கூடாது என்பது பெண்ணடிமைத் தண்தின் உச்சம் என்பதும் பதிவு செய்கிறார் ஆனால் பெண்கள் அதற்கு நேர்மாறாக குடும்பத்தை தாங்குதலும் வயல்வெளிகளில் உழைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறார்கள் கடற்கரையும் ஆறும் சேரும் கழிமுகம் அல்லது காயலில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரங்களை கொண்டு வந்து காய வைத்து அப்படியும் காயாத ஈரப்பதத்தோடு அடுப்பில் எரியவிட்டு அதனால் உண்டாகும் புகையில் கண்கள் சிவந்தும் சுவாசிக்க சிரமப்பட்டும் , வயல்வெளி ஐதாளர் தன் நேரத்தை செலவிடாமல் பெண்கள் இருவரும் (பார்வதியும், சரஸ்வதியும் ) (சரஸ்வதியும் , சத்தியபாமாவும் ) (சரஸ்வதியும், நாக வேணியும் ) சேர்ந்து விதைப்பதும் சூரனின் துணை கொண்டு அறுவடையும் , புன்னை காய்களை பெறுக்கி காய வைத்து எண்னை ஆட்டி வைத்துக் கொள்வது , வடாம் .அப்பளம் .மாவடு போன்ற வெயில் காலத்தில் காய வைத்து மழை காலத்தில் பயன்படும் எனவும் இதனால் அவர்கள் வேலை பளு அதிகமாவதைப் பற்றி கவலைப்படாமல் உழைத்து குடும்பத்தை காக்கின்றனர் அந்த காலத்திலேயே படிப்பினால் ஒரு பலனும் இல்லை என்பதும் அதிகம் படித்தவனுக்கு முன்னுரிமை என்பதையும் சுட்டி காட்டுகிறார் லட்சுமி நாராயண ஐதாளருக்கு படித்து முடித்த பிறகு வேலை கிடைப்பது போல் அடுத்த 20 ஆண்டுகளில் பிஏ படித்தும் பேரன் ராமன் ஐதாளருக்கு வேலை கிடைக்காமல் திண்டாடுவதை சென்னை . பம்பாய் வரை சென்று வருவதையும் பெங்களுரில் ஹோட்டல் வேலையில் வேண்டா வெறுப்பாக பணத்திற்காக உழைப்பதை விரிவாக பதிவு செய்கிறார் காந்தீய கொள்கையான தற்சார்பை அதிகம் விரும்பி விவசாயம் , அவ் ஆகிலேயே வேலை பார்த்துக் கொள்வது போன்ற நாட்டிற்கு தேவையான செய்திகளையும் அலசி ஆராய்ந்து காந்தீய கொள்கையே நல்லது சிறந்தது என்பதையும் பேரன் ராமன் மூலம் வெளிபடுத்துகிறார் அவ்வாறே குழந்தைகள் திருமணம் அக்காலத்தில் நடந்தது என்பதற்கு இந்நாவல் சரியான ஆதாரம் காட்டி உள்ளார் பத்து பதினோரு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் நடந்தற்கு சரஸ்வதி ,பார்வதி , சுப்பி நாகம்மை, நாக வேணி போன்ற பாத்திரப்படைப்பினால் வெளிபடுத்துகிறார் அதோடு மருத்துவமனையில் பிரசவம் பார்பது அரிது அப்படியே உடல் நிலை பாதிப்பென்றாலும் மருத்துவமனை போக நீண்ட தூரம் போக வேண்டும் என்பதும் நல்ல பதிவு சீனமையரின் நட்பை விவரித்து சொல்லியே ஆகவேண்டும் தாத்தா ராமன் ஐதாளருக்கு பெண் பார்க்க போவது கல்யாணத்துக்கு எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வதும், வந்த விருந்தினரை வரவேற்பதிலும் ஆத்மார்த அர்பணிப்பும் ,பண விஷயத்தில் ஏற்படும் விரிசலும் அதை அதிகப்படுத்தும் விதமாக ஒட்டு வீடு கட்டுதலும் அலங்கார கதவு அமைத்த விதத்திலும் அது அதிகம் ஆகி அவர் மகன்கள் பெங்களுரில் ஹோட்டல் வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஊரில் நிலம் வாங்கி போடுவதில் இருவருக்கும் பனிப்போர் நிகழ்கிறது அதில் சீனமய்யர் தோற்றலும் மகன் லட்சுமன ஐதாளர் அவர் வீட்டுக்கு போவதும் அதனால் தந்தை ராமன் ஐதாளர் அவன் மீது சினம் கொள்வதும் ஏற்பட்டு பிறகு இறக்கும் தறுவாயில் மீண்டும் இருவர் நட்பும் மலருவதும் நிகழ்கிறது அதற்கு நேர்மாறாக லட்சுமன ஐதாளரும் சீனமய்யரின் கடைசி மகன் ஒரட்டன் சேர்ந்து தனியே ஹோட்டல் வைப்பதும் அதனால் தாத்தாராமன் ஐ தளர் சம்பாதித்த பணத்தை இழப்பதும் ஒரட்டன் தன் பங்கு வந்த பணத்தை இழந்து கடைசியில் இருவரும் பெங்களுரில் ஒரு மூலையில் குடிசையில் சீட்டாட்த்தில் ஈடுபடுவதை காணலாம் சேர்மானம் சரியில்லை என்றால் வாழ்க்கையில் நேரும் இடர்பாடுகளையும் பதிவு செய்திருப்பது நல்ல போக்கு பணம் எக்காலத்திலும் தன் வேலையை மனிதர்கள் மூலம் நடத்திக் கொள்கிறது. இந்நாவல் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் சரஸ்வதி , மிக இளம் வயதில் விதவையாகி தன் தமயன் வீட்டுக்கு வந்து அங்கேயே தங்கி தமயனின் முதல் மனைவி பார்வதி , இரண்டாவது மனைவி சந்தியபாமா , அவரின் குழந்தைகள் லட்சுமணன் , சுப்பி , பேரப்பிள்ளைகள் , பேரப்பிள்ளையின் மனைவியான நாகவேனிக்கும் தன் காலம் முடியும் வரையிலும் மனம் கோணமலும் பிறரின் மனம் நோகாமலும் , உடல் உழைப்பால் குடும்பத்தை காப்பாற்றுவதிலும் இந்திய மனத்தை கொண்டுள்ளார் பெற்றோரின் கண்டிப்பு அதிகமானாலும் செல்லம் அதிகமானாலும் பாதிக்கப்படுவது பிள்ளைகளே , லட்சுமணஐதாளர் இதற்கு ஒரு முன்னுதாரணம் என்ன செய்தாலும் சேர்மானம் சரியில்லை என்றால் இது தான் நடக்கும் நடந்திருக்கிறது தந்தை ராமன் ஐதாளர் சம்பாதித்த பணம் , புகழ் ஆகியவற்றை போக்கவும் மகன் ராமன் ஐதாளர் வாழ்வில் முன்னேற இவரே உதாரணம் இந்நாவல் இந்திய மனத்தையும் ஆன்மாவை தொடுவதாக அமைந்துள்ளது
நன்றி கலியபெருமாள் வீராசாமி


5 

Share


K
Written by
Kaliyaperumal Veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad