Bluepadஇளைஞர்களுக்கு பங்குச்சந்தை பற்றி தெரிய வேண்டியது அவசியம்...!
Bluepad

இளைஞர்களுக்கு பங்குச்சந்தை பற்றி தெரிய வேண்டியது அவசியம்...!

S
Senthil Rajan
10th Jun, 2020

Share
பங்கு சந்தை என்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள் ஏனென்றால் அதில் பணம் போட்டால் மொத்தமாக போய் விடும் அதில் எத்தனையோ நபர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருக்கிறார்கள் என்கின்ற எண்ணம் இன்னும் அனைவர் மனதிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பங்குச்சந்தை என்பது பல்வேறு திட்டங்களை கொண்ட ஒரு சந்தை ஆனால் வங்கி போல கண்டிப்பாக இத்தகைய பணம் நம் கைக்கு வரும் என்று கூற முடியாத ஒரு சந்தை தான் என்றாலும் கண்டிப்பாக நாம் பயப்படும் அளவுக்கு ஒரு ஜுமான்ஜி விளையாட்டு கிடையாது.

மியூச்சுவல் ஃபண்ட் :

மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கி விட்டோம் என்றால் அது சந்தையில் அந்த பொருளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நமது பங்கு மதிப்பும் ஏறி இறங்கும். இதில் தான் இந்த சந்தை அபாயங்கள் நிறைய இருக்கிறது ஆனால் உடனடியாக நாம் அதை விட்டு விடாமல் சற்று நாட்கள் பொறுத்து இருந்தாலும் நமக்கு போட்ட காசுக்கு மேல லாபம் வருவதாக கூறுகிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நிதானமே மிக மிக அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள் நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகள் பற்றி ஆய்வு செய்து அதில் முதலீடு செய்துவிட்டு, கொஞ்சமாவது நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். எல்லோரும் சொல்கிறார்களே என்று இஷ்டத்திற்கு வாங்கினால் நஷ்டம்தான் ஏற்படும் என்றும் ஆலோசனைத் தருகிறார்கள்.

சிஸ்ட்மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் :

எஸ்ஐபி என்பது ஒரேடியாக பணத்தை ஒட்டுமொத்தமாக சேர்க்காமல் மாதமாதம் நமக்கு எவ்வளவு பணம் வருகிறது எவ்வளவு சேர்க்க முடியுமோ அப்படி சேர்க்கலாம் அந்த பணமும் மியூச்சுவல் பண்டு அல்லது நீங்கள் விரும்பும் அரசாங்கத்தின் பங்குகளிலோ வரவு வைக்கப்படும்.

அது நாள்பட நாள்பட இன்று 500 ரூபாய் என்பது பத்து வருடம் கழித்து இன்றைய 100 ரூபாயின் மதிப்பைப் பெற்று விடும் எனவே காலம் செல்ல செல்ல நமக்கு ஒரு சேமிப்பு அவசியம் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும் பங்குச்சந்தையை பற்றி நன்றாக அறிந்து கொண்டு முதலீடு செய்து வந்தால் நிச்சயமாக நமக்கு அது கை கொடுக்கும் ஒரு ஐந்து வருடத்தில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்படி பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டாலே ஓரளவிற்காவது அவர்கள் இலக்கை எட்ட இந்த சேமிப்புகள் உதவும்.

கமாடிட்டி :

பங்குச் சந்தைகளில் கமாடிட்டி என்று சொல்லப்படுவதில் தங்கம் வெள்ளி மற்றும் எண்ணைய் , காய்கறிகள், அரிசி போன்றவை அடங்கும். அதை பொருத்தமட்டில் அன்றைய விலைப்பட்டியலை பொருத்து அதன் மதிப்பு மாறும் அதில் ஒரு சில பங்குகளை வாங்கி விற்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் எனவே இதில் முதலீடு செய்யும்போது மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள் மார்க்கெட்டைப் பொறுத்தவரை நமக்கு பணம் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தால் ஓரளவிற்கு நல்ல லாபம் தரும் நாம் சிறுக சிறுக சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அந்த அளவு கை கொடுக்காது என்பது அவர்கள் கருத்து.

பங்குச் சந்தை என்பது ஒரு விசித்திரமான ஒரு சேமிப்பு. நகை தான் பரமபதம் அதே போல திடீரென்று ஏற்றிவிடும் சர்ரென்று வழுக்கை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நாம் அதற்கு பெரிதாக அச்சப்பட தேவையில்லை ஓரளவுக்கு நஷ்டம் அடையும் என்பது நாம் முன்கூட்டியே கணித்து வைத்தால் நஷ்டத்தின் அளவைப் பெரிதும் குறைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லது சிறிது காலம் அப்படியே பொறுமையாக இருந்து விட்டு பங்குகள் ஏறு முகத்தில் செல்லும் போதும் கூட அதை விற்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

எனவே பதறாமல் இருந்தால் பங்குச்சந்தையில் நாம் ஓரளவு நல்ல காசு பார்த்து விடலாம்.


0 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad