Bluepadஸ்டார்ட்அப் கம்பெனிகள் - நம் இந்தியாவின் புதிய அடையாளங்களாக மாறி இருக்கிறது.
Bluepad

ஸ்டார்ட்அப் கம்பெனிகள் - நம் இந்தியாவின் புதிய அடையாளங்களாக மாறி இருக்கிறது.

A
Ananth A.
10th Jun, 2020

Shareஸ்டார்ட்-அப் கம்பெனிகள் எனப்படும் சிறிய ரக தொடக்க நிலை நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இப்போது பெருகிவருகிறது இதை அடிப்படையாகக் கொண்டு "ஸ்டார்ட் அப் இந்தியா" என்னும் திட்டத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கி இது போன்ற நிறுவனங்கள் தொடங்க இருப்பவர்களின் வேலையை சற்று எளிதாக்கி இருக்கிறது.

அது என்ன ஸ்டார்ட் அப்? :

ஸ்டார்ட்அப் என்பது எந்த விதமான சிறிய தொழிலாகவும் இருக்கலாம் அதை நான்குக்கும் மேற்பட்ட நபர்கள் செய்வதோ இல்லை அதற்கு குறைவாக கூட இருக்கலாம் என்பது ஒரு புதிய வித்தியாசமான ஒரு ஐடியா.

இந்த ஸ்டார்ட் பண்ணுவது ஐடி கம்பெனி ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை அது ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியாக இருக்கலாம் அல்லது ஒரு காரணியாக இருக்கலாம் அல்லது சிறிய ஆப் டேவலப்மன்ட் கம்பனி ஆக இருக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஸ்டார்ட் அப்கள் தோன்றக் காரணமே நாம் எத்தனை நாளைக்கு தான் இன்னும் எத்தனை வருடம் வேலை பார்ப்பது நாமே இந்த சம்பாத்தியத்தை ஈட்ட முடியாதா என்ற எண்ணமே காரணம் ஆனால் இந்த ஸ்டார்ட் அப் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஆரம்பித்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்டார்ட்-அப் என்பது ஒருவரின் தனி அனுபவத்தால் ஏற்படலாம் அல்லது சரி இப்படி செய்து பார்க்கலாம் என்று எண்ணதின் காரணமாக ஏற்படலாம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்க பெருமளவு பணம் தேவைப்படும் என்ற நிலையெல்லாம் இப்போது மாறிவிட்டது இப்போது ஃபண்ட் ரைசிங் எனப்படும் குரூப் போன்ற சில செயலிகள் மூலம் தேவையான பணத்தை மக்களிடமே பெற்றுக் கொண்டு மீண்டும் லாபம் வரும் நேரத்தில் அதே பணம் கொடுத்து அவர்களிடம் திருப்பிக் கொடுக்கலாம் ஆனால் அதிலும் பல மோசடி ஆசாமிகள் இருக்கிறார்கள் தான் நாம் தான் சற்று கவனமாக செயல்பட வேண்டும்.

ஸ்டார்ட்அப் என்பது ஒரு புதுவித சிந்தனை. எனக்கு தெரிந்தவரின் தகப்பனார் நெடுங்காலமாக சமையல் வேலை தான் செய்து வந்தார். அவருக்கு ஆ முதல் அக்கு வரை சமையல் அத்துப்படி என்றாலும் என் நண்பன் இந்த கேட்டரிங் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது அவர் பெரிதாக அதற்கு ஒத்துழைப்பு தர முன்வரவில்லை ஏனென்றால் இதை தான் நான் இத்தனை நாட்களாக செய்திருக்கிறேன் இதில் நஷ்டம் தான் அதிகம் உடல் உழைப்பு அதிகம் என்று கூறி எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த நண்பரோ துணிந்து இதை செயல்படுத்தினார்.

அலுவலகத்திற்கு செல்லும் பலபேர் நல்ல வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அது அவர் மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்ய தொடங்கியது. வாழ்வில் சில நாட்கள் இருக்கும்போது இந்த டப்பா வாலாக்களை பார்த்தார் அது போல நாம் செய்யலாம் என்று யோசித்து நண்பனுடன் இணைந்து அலுவலகத்திற்கு செல்பவர்கள் நல்ல சாப்பாடு விரும்புவர்கள் போன்ற சிலரை அணுகி அந்த தொழிலை ஆரம்பித்தார்.

இன்று வரை எந்த சங்கடமும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அவரின் ஸ்டார் நிறுவனம். அதற்கு அவர் மூலதனமாக செலவழித்த காசை இரண்டே மாதங்களில் எடுத்துவிட்டார் இதற்கு காரணம் யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களை இவர் தேர்ந்தெடுத்து அணுகினார்.

தாம்தூம் என்று பெரியதாக ஆரம்பித்து செலவை இழுத்து விட்டு கொள்ளாமல் சிறிய அளவில் துவங்கி அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் இதுதான் ஸ்டார்ட் கம்பெனிகளின் கான்செப்ட் எடுத்தவுடன் பெரிதாக ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது சிறுக சிறுக முன்னேறிச் செல்வது.

இன்றைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்குபவர்கள் எல்லோரும் ஐஐடியில் படித்துவிட்டு வருவதில்லை. சாதாரணமாக படித்தவர்களும் பல நிறுவனங்களை ஆரம்பித்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிகராக வாழ்க்கையிலிருந்தே பாடம் கற்றுக் கொண்டவர்கள் மிக நன்றாக சாதிக்கிறார்கள் ஒரு சில நேரத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுற்றித் திரிந்த அவர்கள் ஏன் நாம் கடை ஆரம்பிக்க கூடாது என்கிற எண்ணம் தோன்றி அது செய்துகொண்டுதான் செல்கிறார்கள்.

ஸ்டார்ட்டப் மூலம் பல சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவும் மற்றும் லாபம் ஈட்டவும் நன்றாக உதவுகிறது. நிறுவனங்களில் வேலை செய்ய பலரும் முன்வருகிறார்கள் அதற்கு காரணம் நிறுவனங்களில் நாம் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டு நம்மை அங்கீகரிப்பார்கள் என்கின்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது.

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தாள் பிறகு எங்க வேணாலும் அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற வாய்ப்பு இப்போது அதிகரித்து இருக்கிறது.

அந்த காலத்து அப்பாக்கள் கூறுவார்கள் " நீ கைகட்டி வேலை பார்த்தது போதும், உன் கிட்ட 10 பேர் வேலை பார்க்கணும்" என்று அதுதான் இப்போது " ஸ்டார்ட் அப் " மூலமாக நிரூபணமாகி கொண்டு வருகிறது.

இந்தக் திட்டத்தில்தான் இன்றைய இளைஞர்கள் ஓரளவிற்காவது இந்த பொருளாதார தேக்க நிலையை சமாளித்து வருகிறார்கள் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று கூறினாலும் அது மிகையாகாது.

14 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad