Bluepadஇந்த கொரொனா பொது விடுமுறையால் குறைந்த காற்றின் மாசு - இதே நிலை தொடருமா?
Bluepad

இந்த கொரொனா பொது விடுமுறையால் குறைந்த காற்றின் மாசு - இதே நிலை தொடருமா?

A
Abhishek J.
10th Jun, 2020

Shareஇந்த கொரோனா வந்தாலும் வந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. பல சிக்கல்கள் , நாசங்கள்... இழப்புகள்!

ஆனாலும் , இந்த கொரோனாப் பொது விடுமுறையால் பல நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறது.

அதில் நாம் நமது அக்கம் பக்கத்து வீட்டாருடன் மீண்டும் பழையப்படி சகஜமாக பழக துவங்கி இருக்கிறோம்.

மற்றொருவரின் உடல்நலத்தின் மீது அக்கறை கொள்ளத் துவங்கி இருக்கிறோம்.

குடும்பத்தாருடன் செலவழிக்க நேரம் இல்லாமல் தவித்து வந்த நாம் இப்போது போதும் போதும் என்னும் அளவிற்கு கொண்டாடி மகிழ்கிறோம்.

நமக்கு ஏற்பட்ட ஒருசில கெட்டதிலும் நல்ல விஷயங்கள்.

நம்மைப் போலவே நமது இயற்கை அன்னையும் நன்றாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையில் போவோர் வருவோர் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் ஆலைகளில் இருந்தும், நிறுவனங்களிலிருந்தும் அல்லது நமது வாகனங்களில் இருந்து வரும் புகை பெருமளவு குறைந்தது.

அது மட்டுமல்லாமல் ஒலி-ஒளி பெருமளவு குறைந்துவிட்டது.

வண்டி டிராபிக் சிக்னலில் இருக்கும் போதும் கூட " குய்யிமுய்யோ" என்று ஹாரன் அடிக்கும் நாம் இப்போது நிதானமாக செல்ல பழகியிருக்கிறோம்.இதனால் அனைத்து வித மாசுகளும் பெருமளவு குறைந்து இயற்கையே மீண்டும் எழுச்சி பெறதொடங்கி இருக்கிறது. சாலை ஓரங்களில் காட்டு விலங்குகளும் அருமையாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது சில நாட்கள் முன்பு வரைகூட.

எந்த விமான போக்குவரத்து இடையூறு இன்றி வானம் முழுக்க பறந்து ரசித்தன பறவைகள். எந்தவிதச் சிக்கலும் இன்றி சந்தோஷமாக சில நாட்களைக் கழித்த கடல்வாழ் உயிரினங்கள். எந்த குப்பை குழுமம் தாங்காததால் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் அந்தப் படை அழகு பெற்றிருக்கிறது ஆறுகள் நதிகள் எந்த மாசுகளும் இன்றி தெளிந்த நீரோடையாக காட்சி அளிக்கிறது. ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்றால் இதோ இந்த பொதுவிடுமுறை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது அது முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் அந்த நம்முடைய கோரத்தாண்டவம் துவங்கிவிடும்.

இந்த இயற்கையை அப்படியே பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்று பலர் இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இனிமேல் வருடம் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவித்து , இதுபோன்ற இயற்கைக்கும் ஏன் நமக்குமே ஒரு தற்காலிக ஆசுவாச அவகாசத்தை வழங்கலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள் வல்லுநர்கள். அண்டை நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறது வருடம் தோறும் இனிமேல் ஒரு இரண்டு மூன்று நாட்கள் இது போல் பொது விடுமுறை அளிக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

ஆனா இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று கூற முடியாது!

ஒரு சில ஆண்டுகள் அறிவித்துவிட்டு பின்னர் பொருளாதார நெருக்கடி காரணம் காட்டி அதை விலக்கி விடுவார்கள் பொது விடுமுறை அறிவித்தால் மட்டுமே இத்தனை விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறமுடியாது நம் மக்கள் நம் மனதில் இந்த விஷயங்களை நன்றாக பதித்துக் கொள்ள வேண்டும் நாம் தூய்மையை கடைபிடித்தால் எந்த விஷயமும் மாசு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மாற்றம் துவங்க வேண்டியது நம்மிடம் இருந்துதான் என்று நாம் உணராத வரையில் எந்த திட்டம் அறிவித்தாலும் அதற்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடிக்காமல் போய் விடுவோமா என்ன ?
0 

Share


A
Written by
Abhishek J.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad