Bluepadஅக்கம் பக்கத்து வீட்டாரின் அனுகூலங்கள்…!
Bluepad

அக்கம் பக்கத்து வீட்டாரின் அனுகூலங்கள்…!

S
Senthil Rajan
30th Nov, 2021

Share




உறவுகளைத் தாண்டி ஒரு சிறப்பான நட்பு பாராட்ட முடியும் என்றால் அது அக்கம் பக்கத்து வீட்டார் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் ரத்த சொந்தங்களில் மீது எவ்வளவு பாசம் காட்டுகிறோம் அதேபோல நம்முடன் குடியிருந்தவர்கள் மீதும் காட்ட முடியும் அதற்கு பண்டைய கால மனிதர்கள் சாட்சி. குடும்ப உறுப்பினர்களை தாண்டி ஏன் ரத்த சொந்தங்கள் அளவிற்கு அன்பாக பழக முடியும் இந்த அக்கம்பக்கத்து வீட்டார்கள் மூலம்.

இப்போதுதான் அக்கம் பக்கத்து வீட்டார் யார் என்றே தெரியாது அவர் என்ன செய்கிறார் என்றும் தெரியாது ஆனால் ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் அக்கம்பக்கம் வீடு என்ற பேதமே இருக்காது ஒண்டு குடித்தனத்தில் இருப்பவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக தான் பழகினார்கள் இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் இன்று எந்த ஊர் சென்றாலும் டச்சில் இருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களும் நமக்கு ஏற்படும் நன்மைகளும் :

அக்கம் பக்கத்து வீட்டுக்காரருடன் நாம் நன்றாக பழகும் போது அவர்களுடைய கலாச்சாரத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நம்மைப் பற்றியும் அவர்கள் நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது இன்று அபார்ட்மென்ட் கல்சரில் நம் வீட்டில் ஏதாவது சிறப்பான ஒரு திண்பண்டத்தை செய்தால் அதை 6 _ 7 பார்சலாக பிரித்து தெரிந்தவர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொடுக்கும் வழக்கம் இன்று உருவாகி இருக்கிறது.

அவர்கள் செய்யும் பண்டத்தை நாம் சுவைக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது இது வரும் பல மாற்றங்களுக்கு மட்டுமல்ல நம்மை பற்றி அவர்கள் நன்றாக புரிந்து கொள்ளவும் அவர்களை பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.

பாரத விலாஸ் என்று சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ஒரு படம் வந்தது அதிலும் இதே போல் அக்கம் பக்கத்து வீட்டாருடன் அணுசரிப்பு பற்றிய படமே அந்தப் படத்தில் ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டார் பண உதவி செய்து அவரை மீட்பார்கள் அதுபோன்ற நிஜ வாழ்விலும் எக்கச்சக்க சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது ஆனால் இந்த அக்கம்பக்கத்து வீட்டார்கள் சென்னை போன்ற நகரங்களில் அந்த அளவு சுகங்களை அனுபவிக்க முடிவதில்லை ஏனென்றால் காலம் ஓடும் வேகத்தில் அக்கம் பக்கத்து வீட்டார் என்ன சொந்த வீட்டில் இருக்கும் நேரம் கூட இல்லாத காரணத்தினால் அக்கம் பக்கத்து வீட்டார் மேல் இந்த பாசங்கள் வருவதில்லை ஆனால் இந்த நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களில் கிராமங்களில் இந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் உறவு முறை என்பது இன்றும் நிலைத்து நிற்கிறது.

பெங்களூரு போன்ற நகரங்களில் எடுத்துக் கொண்டால் மற்ற மொழி பேசுபவர்கள் மிக அதிகம். பெங்களூரில் போல ஊர்களில் தமிழ் மராத்தி சௌராஷ்டிரா என்று பல பாஷை பேசுவார்கள் அதிகம். அவர்கள் எல்லோருமே ஒரு கூட்டு குடியிருப்பில் தான் இருப்பார்கள் அப்போது இன்னும் நமக்கு கலாசார வித்தியாசங்கள் நன்றாக புரியும்.

பழகிவிட்டால் எல்லோருமே மனிதர்கள்தான் அவரவர்கள் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு நடிப்பார்கள். உள்ளத்தளவில் இந்தியர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாசம் கொண்டுதான் இருக்கிறார்கள் .”பேசிக்கலி நாம எல்லாம் எமோஷனல் இந்தியன்ஸ் தானே”.

சில நாட்களாக சற்று ஒளிந்து கொண்ட இந்த அக்கம்பக்கத்து வீட்டாருடன் பழகும் வழக்கம் இப்போது இந்த covid-19 மீட்டு எடுத்து இருக்கிறது. இந்த வியாதியினால் ஏற்பட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்போது அக்கம் பக்கத்து வீட்டாருடன் மனம் விட்டு பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள் தமது பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இது என்றுமே நிலைத்து இருந்தால் ஒற்றுமையும் கூடும், நமக்கு என்று இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்னும் பன்மடங்கு பெருகும்.


0 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad