Bluepadஎனக்குப் பிடித்த பிரபலமான தமிழ் நடிகர்.
Bluepad

எனக்குப் பிடித்த பிரபலமான தமிழ் நடிகர்.

S
Shankar
9th Jun, 2020

Share


எனக்கு பிடித்த நடிகர் தமிழ்நாட்டின் அடையாளம் ஆனால் அவர் தமிழர் அல்ல என்று கூறி பலர் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள், அரசியல் செய்கிறார்கள்.

அவருடைய இடத்தை பிடிக்க 40 ஆண்டுகளாக எக்கச்சக்க பேர் முயற்சிசெய்து இன்றளவும் தோற்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவரை மட்டம் தட்ட என்னென்னவோ கூறுவார்கள் தமிழர் அல்ல அவர் , பாஜகவின் ஆதரவாளர் மோடியின் நெருங்கிய நண்பர் தமிழின துரோகி என்று என்னென்னமோ கதை கட்டுவார்கள்.

மேலும் சிலர் ஒரு படி மேலே போய் அவர் வயதிருக்கும் அவர் திறமைக்கு மரியாதை கொடுக்காமல் வாய்க்கு வந்தபடி வசை பாடுவார்கள்.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்காத அந்த நடிகர் எப்படி முன்னேறலாம் என்று தான் வேலையை பார்த்துக்கொண்டு சென்று கொண்டே இருப்பார் அவருக்கு வயது 70 கடந்து விட்டது இன்னும் அவர் கதாநாயகனாக தான் நடித்து கொண்டிருக்கிறார் அவருடைய படங்களை வாங்க போட்டி போட்டுக்கொண்டு வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் வரிசையில் தான் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவருடைய இமேஜ் எந்த அளவிற்கு இன்றளவும் இருக்கிறது என்று.

1975 ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் என்னும் படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானவர் தான் , அதன் பிறகு சில சில வேடங்கள்தான் ஏற்று நடித்தார் ஆனால் 1980களின் ஆரம்பத்தில் உச்சநிலையை அடைந்துவிட்டார்.

அதற்கு காரணம் அவருடைய விடா முயற்சி , செய்யும் தொழிலில் இருக்கும் ஈடுபாடு , ஆரம்பத்தில் விமர்சனங்களை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விமர்சித்தவர்களை கூப்பிட்டு வசைபாடி சண்டை சச்சரவு செய்தவர்தான் அவரும் ஆனால் அதன் பிறகு ஒரு பக்குவத்தை எட்டி விட்டார் .

அவருடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்காது ஆபாச காட்சிகள் இருக்காது முகம் சுழிக்கும் அளவிற்கு என்று எதுவுமே இருக்காது அதனால்தான் அவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் பாராட்டுகிறார்கள் 4 தலைமுறையை தாண்டி ஐந்தாவது தலை முறையிலும் அவருக்கு ரசிகர்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியதோடு நில்லாமல் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

என் போன்ற அவரது அபிமானிகளுக்கு அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று தோன்றாமல் இல்லை ஆனால் அவருக்காக அவர் வருவதாக தெரியவில்லை அப்படி வருவதாக இருந்தால் அவர் எப்போதோ வந்து இருக்கலாம் இத்தனை நாட்கள் தமது ரசிகர்களுக்கு இதை செய்யாது விட்டது போல ஒரு குறை கூட இருந்திருக்கலாம் அதனால அரசியல் மாற்றத்திற்கான ஒரு ஆலோசனையை முன்மொழிந்து அதற்குப் பின்னால் அவர் இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். அவர் கூறிய அரசியல் மாற்றத்திற்கான முன்மொழிவை பல்வேறு விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது அப்படி கூறவே ஒரு தெளிவு வேண்டும்.

சிறுவயதில் பஸ் கண்டக்டராக இருந்து கஷ்டப்பட்டு தாயாரை இழந்து பிறகு சினிமாதான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்து சென்னைக்கு பிலிம் சூட்டில் படிக்க வரும் போதெல்லாம் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்து இருக்காது நாம் நாற்பது வருடங்களாக தமிழ் சினிமாவை கட்டி ஆளப் போகிறோம் என்றெல்லாம்... பல இன்னல்களை சந்தித்து , குறிப்பாக நிறத்தை வைத்தே எக்கச்சக்க வசைகள் ... ஆனால் அதையும் தாண்டி சிறந்த நடிகராக வந்து , இயக்குனர்களின் செல்ல பிள்ளையாக மாறி விநியோகஸ்தர்களின் விடிவெள்ளியாக உருவெடுத்து இன்றும் அதே வெற்றிப் பாதையில் வீரநடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

என்றுமே ராஜா நீ ரஜினி என்று அவர் படத்தில் வரும் பாடலை வைத்தே அவரை வாழ்த்தி விடலாம் அந்த அளவிற்கு அந்த வரிகள் அவரின் வாழ்க்கையுடன் அப்படியே ஒத்து போய்விட்டது.

70 வது வயதில் அவர் நடிக்கும் அளவிற்கு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை.

அந்த அளவிற்கு அவர் உடலை அதற்கு தகுந்தார்போல் வைத்துக் கொண்டிருக்கிறார் அந்த சுறுசுறுப்பு , அதே சுறுசுறுப்பு.

0 

Share


S
Written by
Shankar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad