Bluepadமறுமணம் - அதிலிருக்கும் ஆழமான விஷயங்கள் , உணர்வுகள்.
Bluepad

மறுமணம் - அதிலிருக்கும் ஆழமான விஷயங்கள் , உணர்வுகள்.

R
Reshma us
9th Jun, 2020

Shareமறுமணம் என்பது நெடுங்காலமாக கூறப்பட்டு வரும் ஒரு விஷயம் தான் ஆனால் அதை ஏற்க சமுதாயங்கள் முன் வருகிறதோ இல்லையோ சிலரின் மனங்கள் முன்வரவில்லை அதுதான் உண்மை.

அதுவும் ஆண்களின் மறுமணத்திற்கு ஆஹா ஓஹோ என்று ஆதரவு தெரிவிக்கும் பலர் பெண்களின் மறுமணம் என்றால் முகம் சுளிக்க தான் செய்கிறார்கள்.

மனைவி இறந்த ஆண் அல்லது விவாகரத்து ஆன ஆண் மறுமணம் செய்வதில் இந்த சமுதாயத்திற்கு எந்த சிக்கலும் இல்லை ஆனால் இதையே ஒரு பெண் செய்ய வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கு எத்தனை கடுஞ்சொற்கள் வருகிறது தெரியுமா?

இருமனம் ஒத்தது தான் திருமணம் அது முதல் திருமணமாக இருந்தால் என்ன மறுமணமாக இருந்தால் என்ன திருமணம் செய்து கொள்ள வேண்டிய இரு மனங்கள் ஒத்துப்போக வேண்டும்.

அப்படி மறுமணத்தில் நடக்கிறதா என்றால் ஆம் அதுதான் உண்மை அதிலும் நடக்கத்தான் செய்கிறது.

மறுமணங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சகஜமான விஷயமாக மாறி விட்டாலும் , அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் தானே தவிர வேரு எவரும் அல்ல. ஊர் பேசிக் கொண்டே தான் இருக்கும் எதை செய்தாலும் ஆகையால் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எப்போதுமே இல்லை.

மீண்டும் காதல் மலருமா?

மறுமணம் பற்றி பலர் பெரிதும் யோசிக்காமல் இருப்பதற்கு காரணமே மீண்டும் அந்த காதல் எப்படி மலரும் என்கின்ற அந்த ஆழ்ந்த சிந்தனையால் தான் . அதில் எந்த தவறும் இல்லை அதாவது ஏற்கனவே இருந்த கணவரின் மேல் மிகுந்த ஆசை வைத்த ஒரு மனைவியால் சற்றென்று இன்னொருவரை வாழ்க்கை துணையாக ஏற்று விட முடியாது.

ஆனால்... அதற்கு முடியவே முடியாது என்று பொருள் இல்லை.

வாழ்க்கைத்துணை என்பது, வாழ்வின் வெற்றுப் பகுதிகளை ஒரு துணைக் கொண்டு கடக்க பயன்படும் ஒரு பெரிய உறவு. அது இருபாலருக்கும் சமம்.

வாழ்வு முழுக்க போனவர்களை நினைத்து வாழ்பவர்கள் இன்றும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது ஆனால் அவர்கள் மறுமணத்திற்கு முடிவு செய்தாலும் பலர் அவர்களை குத்திக் காட்டிப் பேசியே அவர்கள் முடிவுகளிலிருந்து மாற்றுகிறார்கள். அதுதான் மிகுந்த கண்டிக்கத்தக்க செயலாக இருக்கிறது அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம் அதில் மூக்கை நுழைக்க சமுதாயத்தினருக்கு எங்கிருந்து அதிகாரம் வருகிறது என்று தான் தெரியவில்லை.

பலர் திருமணத்திற்கு தயங்குவது குழந்தைளை காரணம் காட்டித்தான்.

குழந்தை நன்றாக வளர்ந்து விட்டால் இதுவரை அவளை அம்மா என்று அழைத்து வந்தவள் நாளை வேறு ஒருத்தியை எப்படி அம்மாவென்று அழைப்பாள் என்கின்ற எண்ணம் தான் இந்த மறுமணத்திற்கு ஒரு இரும்பு திரையாக இருக்கிறது.

இதெல்லாம் இப்போது சகஜமாகி விட்டது சென்ற மாதம் கூட ஒரு ஜோக் படிக்க நேர்ந்தது ஒரு குழந்தை காரில் உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பெண்மணி அவரை ஸ்கூட்டரில் கடந்து செல்கிறார் அப்போது அந்த குழந்தை சொல்கிறது அப்பா அப்பா என்னுடைய எக்ஸ் மம்மி போறாங்கப்பா என்று கூறுகிறது அதற்கு அந்த ஆடவர் கூறுகிறார் அப்படியா விடு விடு fucturela பாத்துக்கலாம் என்று.

இன்னும் இந்த விஷயங்கள் வருங்காலங்களில் அதிகமாகத்தான் மாறும் என்றுதான் கூறுகிறார்கள். அதாவது சிலர் இந்த மறுமணங்களை ஜென்மங்கள் கணக்கில் கூறுகிறார்கள் சென்ற ஜென்மங்கள் நமக்கு ஞாபகம் இருக்காது ஞாபகம் இருந்தால் கூட இதே சூழல்தான் ஏற்படும் சென்ற ஜென்மத்தில் என் மனைவி இன்னொருத்தன் கூட இருப்பதா என்று சரணம் பாடுவார்கள் இந்த மறுமணத்திற்கு ஜென்மத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் மறுமணம் செய்து கொள்ளும் போது இந்த ஜென்மத்தில் நினைவுகள் மாறிவிடாது என்றெல்லாம் விளக்கங்கள் கூற ஆரம்பித்து விட்டார்களாம்... புதிய வியாக்கியானங்கள் தான்..!


13 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad