Bluepadஸ்மார்ட் போனில் விளையாட - மிக மிக எளிமையான விளையாட்டுக்கள்.
Bluepad

ஸ்மார்ட் போனில் விளையாட - மிக மிக எளிமையான விளையாட்டுக்கள்.

A
Arvind Kumar
8th Jun, 2020

Share



மொபைல்போன் இல்லாவிடில் பலபேருக்கு பொழுதே போகாது அந்த அளவுக்கு மொபைல்போன் உற்ற நண்பராகவும், நேரக் கடத்தியாகவும் பயன்படுகிறது.

மொபைல் வெறியர்களும் சரி, சிறிது நேரம் விளையாடுவோம் என்பவர்களுக்கும் சரி... மொபைல் போனில் விளையாட எண்ணற்ற விளையாட்டுக்கள் இருக்கிறது. இதில் முதல் ரகம் வெறியர்கள் அவர்கள் சதா சர்வகாலமும் போனில் எதையாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள் அவர்கள் எப்படி வெறித்தனமாக விளையாடுவதற்கு என்று எக்கச்சக்க தளங்கள் இருக்கிறது.

தற்போது டிவி விளம்பரத்தில் நொடிக்கு ஒரு முறை வரும் பிளே-ரம்மி, எம்.பி.எல் போன்ற பல தளங்களில் விளையாடினாலே பணம் கொட்டும் என்கிற மாயாஜால சொற்களை வைத்து பலரை விட்டில் பூச்சிகளாக மாற்றி இருக்கிறார்கள் எனவே அவர்கள் காசு கிடைக்கிறது என்கின்ற முனைப்பில் அதையே கெதி என்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் ரகமாணவர்கள் , இப்போது எதுவும் வேலை இல்லை சிறிது நேரம் விளையாடுவோம் என்று விளையாடுபவர்கள். இப்படி விளையாடுபவர்களுக்கு என்று எக்கச்சக்கமான எளிதான விளையாட்டுக்கள் மொபைல்போனில் பரவலாக கிடைக்கிறது அதுவும் இலவசமாகவே.

இலவச கேம் ஆப்களாகவும் இருக்கிறது , அப்படியே ஆன்லைனில் விளையாடவும் செய்யலாம். இப்போது வரும் லேட்டஸ்ட் மொபைல் போன்களில் அதாவது ரெட்மி, விவோ போன்ற மொபைல்களில் இன்பில்ட் ஆகவே சில விளையாட்டுக்கள் இருக்கிறது அதுவே மிகவும் நேரத்தை வீணாக்காமல் விளையாடும் உற்சாகத்தையும் கொடுக்கிறது.

எத்தகைய விளையாட்டுகள் என்றால் கத்தரிக்கோலை வைத்து படங்களை நறுக்குவது, பழங்களை பறக்க விட்டு அதன் மீது கத்தியை வீசுவது, பலூன் உடைப்பது, அதேபோல் கேண்டி க்ரஷ் போன்ற விளையாட்டுக்களை சிறிது சிறிதாக மாற்றி வைத்திருக்கிறார்கள் இத்தகைய விளையாட்டை விளையாடும் போது ஓரளவிற்கு கவனம் குவியும் என்று கூறுகிறார்கள்.

குறிப்பாக இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் அனைவராலும் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு "லுடோ" என்று கூறுகிறது ஒரு ஆய்வறிக்கை.

நாம் முன்னால் விளையாடிய தயக்கட்டு வெட்டு ஆட்டம் ஆடும் கட்டத்தில்தான் சிறிது மாற்றி லூடோ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இதை குழுவாக சேர்ந்து விளையாடலாம், நண்பருடன் சேர்ந்து விளையாடலாம், இந்த விளையாட்டு விளையாட நாலு பேர் இருந்தால் போதும் உதாரணத்திற்கு அண்ணன், தங்கைகள் , தம்பிகள் , நண்பர்கள் என்று யார் வேணாலும் விளையாடலாம் அல்லது வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் , அப்பா அம்மாவுடன் , விளையாடலாம் இப்படி விளையாடப்பட்ட இந்த விளையாட்டுதான் சமீப காலத்தில் மிகவும் பிரபலம்.

இதயும் தவிர்த்து காலகாலமாக விளையாடப்பட்டு கொண்டுவரும் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு மீண்டும் பலராலும் தரவிறக்கம் செய்யப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் ஒரு காலத்தில் மிக மிக பிரபலமாக இருந்தது பிறகு சமீப காலத்தில் இந்த டச் போன்களின் எழுச்சியால் சற்று அதன் மவுசு குறைந்து தான் இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்த விளையாட்டுக்கான மவுசு கூடி விட்டதாகத்தான் கூறுகிறார்கள்.பறவைகள் பறந்து சென்று கட்டிடம் போல் இருக்கும் இடத்தை தட்டி உடைத்து விடும் விளையாட்டு. அது எழுப்பும் ஒலி தான் மிக மிக பிரசித்தம்!! அதற்காகவே இந்த விளையாட்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

இதையும் தவிர்த்து எக்கச்சக்க விளையாட்டுக்கள் இருக்கிறது டெம்பிள்ரன் விளையாட்டை சற்று மாற்றி ஒவ்வொரு மொபைலிலும் வேறு மாதிரியாக கொண்டு வந்திருக்கிறார்கள் அதுபோல கிரிக்கெட் , கேரம் , போன்ற கேம் களை ஒரு சில அங்குலங்கள் மாற்றி , வடிவங்களை மாற்றி பல்வேறு விளையாட்டுகளை கொண்டு வந்திருக்கிறார்கள் அதாவது அந்த பழைய மாவில் புதுசு புதுசாக தோசை சுடுவது போல இவர்களும் ஒரே மாதிரியான கேம்கலை வேறுவிதமாக மாற்றி சிறிது டிசைன் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

நம்மவர்களும் கிடைத்தது விளையாட்டு என்று விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

22 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad