Bluepadகடல் மாசை தவிர்ப்பது அவ்வளவு அவசியமா ?
Bluepad

கடல் மாசை தவிர்ப்பது அவ்வளவு அவசியமா ?

G
Gayathri
8th Jun, 2020

Shareகடல் பிடிக்காதவர்கள் மிக மிக அரிது. கடல் ஒரு ரம்மியமான சூழல் ... சில்லென்ற காற்று, ஓயாத அலைகள் , சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கும் மக்கள். இப்படி கடற்கரையை நினைத்து பார்த்தாலே ஒரு குதூகல உணர்வு தோன்றி விடும் அல்லவா!

சென்னை, பாண்டிச்சேரி, கடலூர் போன்ற ஊர்களில் இருப்பவர்கள் எங்க ஊர்ல பீச் இருக்கே உங்க ஊர்ல இல்லையே !! என்று திருச்சி, மதுரையை சேர்ந்தவர்களை செம்மையாக வெருப்பேற்றிவிடுவார்கள்.

அந்த அளவுக்கு கடல் தரும் சுகங்கள் பல இருக்கிறது ஆனால் மனிதனுக்கு எந்த அளவு சுகங்கள் தருகிறதோ, அதுபோல பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது.

பல்வேறு பறவைகளுக்கு கடலில் கிடைக்கும் மீன்கள் மற்றும் மற்ற சில வகையான கடல் வாழ் உயிரினங்கள் தான் அதற்கு உணவே.

நாம் கடலில் செய்யும் அட்டகாசங்களால் இந்த உயிரினங்களின் வாழ்வே பாதிக்கப்படுகிறது... அதனால் நம் வாழ்வும் மிக மோசமடைந்து கொண்டே வருகிறது என்று கூறினால் நம்பமுடிகிறதா? நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் நிஜம்!

நாம் கடற்கரைக்கு செல்கிறோம் சந்தோஷமாக குடும்பத்துடன் பொழுதை கழிக்கிறோம், அங்கு விற்கும் எல்லாவற்றையும் வாங்கி சாப்பிடுகிறோம் ,குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் விற்கும் பண்டங்களை வாங்கி நன்றாக சாப்பிட்டுவிட்டு பிறகென்ன செய்கிறோம்…?

குப்பைகளை பொறுப்பாக அங்கிருக்கும் குப்பைத்தொட்டியில் போடுகிறோம் தானே ? இல்லவே இல்லையே...! அப்படி நாம் பொறுப்பாக குப்பையை தொட்டியில் போட்டு இருந்தால் வாரம் முழுவதும் சேரும் குப்பைகளின் அளவு டன் கணக்கை தாண்டுமா என்ன !?.

சரி, கடலில் பொருட்களை தூக்கி எறிவதால் அப்படி என்ன நஷ்டம் ஆகி விடப்போகிறது? கடலலைகள் அழகாகக் ஒன்றுசேர்த்து அதுவே கிளீன் செய்து விடுகிறது!! என்று விதண்டாவாதம் பேசுபவர்களா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு.

நீங்கள் போடும் குப்பைகளை கடல் இழுத்துச் சென்று உள்ளேதான் விடுகிறது ஆனால் அந்த குப்பைகளை கடல் வாழ் உயிரினங்கள் அதற்கான உணவு என்று நினைத்து சிலவற்றை விழுங்கிவிடுகிறது , பல கடல் வாழ் உயிரினங்கள் அதனாலேயே இறந்து போகிறது.

அப்படி இறந்து போகாத ஜீவராசிகளை உண்ணும் பறவைகள் பாதியிலேயே செத்து மடிகிறது.

இப்படி எதுவுமே நடக்காவிட்டாலும் கூட அந்த மீன்களை பிடித்து நமக்கே தான் விற்கிறார்கள் நாம் வீசி எறியும் குப்பைகளை நாமேதான் அதன் வயிற்றிலிருந்து சாப்பிடப் போகிறோம்.

பாருங்கள் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இந்த விஷயத்தில் நமக்கு தெளிவாக புரிந்து இருக்க வேண்டும். சினிமா வசனங்களை நன்றாக மனப்பாடம் செய்து "நீ விதைத்த விதை ஒன்று "என்று அதற்கேற்றார்போல் டிக் டாக் செய்கிறோம் அல்லவா . அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

இது ஏதோ மிகைப்படுத்தி கூறப்படுகிறது, அப்படியெல்லாம் இருக்காது என்று மட்டும் தயவுசெய்து நினைக்காதீர்கள்!! கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வு நம்மை போன்றவர்களால் கேள்விக்குறி ஆகி கொண்டு வருகிறது.

நாம் விளைவை அறியாமல் செய்யும் சிறு சிறு தவறுகள் அந்த கடலையே நம்பி இருக்கும் உயிரினங்களின் உயிருக்கே உலை வைத்து விடுகிறது. மகாராஷ்டிராவின் கடல்பரப்பில் 80% பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கிறதாம். இது சென்ற வார செய்தித்தாள்களின் செய்தி!!

இப்படியே நிலைமை நீடித்தால்…!

நம் வரலாற்றுப் பாடங்களில் பார்க்கிறோமே ஆறுகள் நிறைந்த இடம் என்று படிக்கும்போது, ஆக இந்த ஊரில் இத்தனை ஆறுகள் எல்லாம் இருந்து உள்ளதா ? என்று வியக்கிரோமே …

அப்படி இருந்த இடங்கள் இன்றைய நிலைமைக்கு வெறும் கட்டாந்தரையாக காட்சி தருகிறதோ அதுபோல சென்னையில் மெரினா பீச் இருந்தது , கடலூரில் சில்வர் பீச் இருந்தது என்று படிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும்.

பீச் அற்ற வாழ்க்கை !! நினைத்து பார்க்கவே முடியாது…

நாம் மாறியே ஆக வேண்டும்.

1 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad